2310.மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ - ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்.

     மைஉற - தீமை உண்டாக;  இறுதி உயிர் எலாம்வாங்குவான் -
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்தகாலன்
தான்-
கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;

- அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின - ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற;  உறு மெய் தானையான்- வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் -வில்வித்தையில்
தேர்ந்தவன்.

     ‘ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர்’ என (1983) முன்னர்க்
கூறியது,  இருபதோடு ஐந்துவைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு
ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள ‘ஐ என்றஐந்தால்
முரண ‘ஐந்துலட்சம் சேனை’ என வரும். அது  நோக்கி, இங்கும்
‘ஐந்நூறாயிரவர்’என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள ‘ஐ’
அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின்
என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது
சேனைப் பெருமை கூறினார்.                                      8