10. பள்ளிபடைப் படலம்

233.ஆய காதல்
     தனையனைத் தந்த அத்
தூய தையல்
     தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
     சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
     சென்று எய்தினான்.

     தொழில் உறுவார் - ஏவல் மகளிர்;  அன்பினன் - இராமன்.   41-1