குகன் பரதனிடத்துக் கொண்ட பேரன்பு  

2339. என இவை அன்ன மாற்றம்
     இயைவன பலவும் கூறி,
புனை கழல், புலவு வேற் கை,
     புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்;
     ஆா அவற்கு அன்பு இலாதார்?-
இராமன்மேல் நிமிர்ந்த காதல்?

    புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை
- புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன்
- வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி
- என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு -
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்கு;  அமைவின் செய்தான் - பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து  மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

     ‘அமைவின் செய்தான்’ என்பது பரதன் தகுதிக்கும், அவன்
குணநலத்துக்கும், அப்போதையதுக்கத்துக்கும் ஏற்ற வகையில் வழுவாது
உபசரித்தான் குகன் என்பதைக் காட்டும். இராமனிடத்துஎந்தக்
குணங்களைக் கண்டு குகன் அன்பு செலுத்தினானோ அதே குணங்கள்
இவன்பாலும் இருத்தலின்இவனிடத்தும் அந்த அன்பு கண்ட அளவிலே
உண்டாயிற்று என்றார். இங்கு ‘எள்ளரிய குணத்தாலும்எழிலாலும்
இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர் கோன் மகள் பயந்தாள்”
(657.) என்பதனைக் கருதுக. ‘பொரு இல் காதல்’ என்பதனைக் குகன்மேல்
ஏற்றி உரைப்பதும்உண்டு.                                      37