மகளிர் ஓடத்தில் செல்லுதல் 2356. | ஊடு உற நெருக்கி, ஓடத்து, ஒருவர்முன் ஒருவர் கிட்டி, சூடகத் தளிர்க் கைம் மாதர் குழமினர் துவன்றித் தோன்ற, பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம் கடையின் குத்தக் கோடுகள் மிடைந்த என்ன, மிடைந்தன குரவுக் கொங்கை. |
சூடகம் - வளையல் (அணிந்த); தளிர்க் கைம் மாதர் - தளிர் போன்ற(மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி - இடையே புகுந்து நெருங்கிநெருக்கி; ஒடத்து - நாவாய்களில்; ஒருவர் முன் ஒருவர் கிட்டி - ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர் துவன்றித் தோன்ற - திரண்டு நெருங்கித்தோன்றுதலால்; பாடு இயல் - பெருமை பொருந்திய; களி நல் யானை -மதமகிழ்வுடைய உத்தம யானை; பந்தி - வரிசையில்; அம் கடையின் குத்த -அழகிய முனைகளால் குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன - கொம்புகள் நெருங்கின என்று சொல்லும்படி; குவவுக் கொங்கை - (அம்மகளிரின்) திரண்ட முலைகள்; மிடைந்தன- நெருங்கின. யானை வரிசைகளில் எதிர் எதிர் யானைத் தந்தங்களின் முனைகள் ஒன்றோடு ஒன்று குத்திநெருங்குதல், கூட்டமான பெண்கள் வரிசை வரிகையாக நெருக்க அவர்தம் முலைகள் நெருங்கிநெருக்குதல் இங்ே்க ஒன்றுக்கொன்று உவமையாம். 54 |