பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல் 2394. | காலை என்று எழுந்தது கண்டு, வானவர், ‘வேலை அன்று; அனிகமே’ என்று விம்முற, சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ, பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே. |
பரதன் சேனை -; காலை என்று எழுந்தது கண்டு - காலைப் பொழுது வந்துவிட்டது என்றுகருதிப் புறப்பட்டது கண்டு; வானவர் - தேவர்; ‘வேலை அன்று; அனிகமே’ என்றுவிம்முற - இது கடல் அன்று, சேனைதான் எனக் கருதித் தமது ஐயம் நீங்கி மனக்களிப்புஅடைய; (அச்சேனை) சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ - (தாம் செல்லும் வழியில்உள்ள) சோலையும், மலைகளும் புழுதியாகி மேலே புறப்பட; பாலை சென்று அடைந்தது - பாலைநிலத்தைச் சென்று சேர்ந்தது. இதுகாறும் இருளில் கடல் என்று கருதியிருந்த வானவர் பகற்பொழுது வந்து புறப்பட்ட அளவிலேசேனை என்று துணிந்தனர் என்பதால் ‘ஏ’ ஈற்றசை. 20 |