2397. ‘பெருகிய செல்வம் நீ பிடி’ என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு, காதலின்
உருகிய தளிர்த்தன - உலகை ஈட்டமே.

     ‘பெருகியசெல்வம் நீ பிடி’ - மிக்க அரசச் செல்வத்தைப் பரதா! நீ
ஏற்றுக்கொள்; என்றாள்வயின் - என்று சொல்லியகைகேயியிடத்தே;
திருகியசீற்றத்தால் - கழன்று எழுந்த கோபத்தால்; செம்மையான் -
முகம் சிவந்த;  கருகிய அண்ணலைக் கண்டு-
(இயல்பாய்க்)கருத்த
திருமேனியுடைய  பரதனைக் கண்டு;  காதலின்- அவன்பாற்
கொண்டஅன்பினால்;  உலவை ஈட்டம் - (பாலைநிலத்திற்) பட்ட
மரக்கூட்டம்; உருகிய- மனம் இரங்கி; தளிர்த்தன- தளிர் விட்டு
உயிர்பெற்றவாயின.

     பட்ட மரங்கள் தளிர்த்துச் செழித்துப் பரதன் செல்லும் வழி
இனிதாயிற்று  என்றார்.‘ஏ’ ஈற்றசை.                              23