2399. தூளியின் படலையும், துரகம், தேரொடு,
மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும்,
ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும்,
‘கோள்இரும் படை இது’ என்று, உணரக் கூறவே,

     (சேனை செல்கிறபோதுஎழுந்த) தூளியின் படலையும் -
சேனாபராகம் எனப்பெறும்புழுதித் திரளும்; துரகம், தேரொடு, மூள்
இருஞ் சினக்கரி முழங்கும் ஓதையும்
- குதிரை,தேர், மேலும் மேலும்
உண்டாகிற பெரிய கோபத்தையுடைய யாளை ஆகியவை ஆர்ப்பரிக்கும்
சப்தமும்;ஆள் இருங் குழுவினர் - காலாட்படையாகிய பெரிய
கூட்டத்தினரின்; ஆரவாரமும் -பேரொலியும்;‘கோள் இரும்படை

இது’என்று -பிறரைக் கொல்ல வரும் பெரும்படை இது என்று; உணரக்
கூற
- பலரும் அறிய எடுத்துச்சொல்ல....(மேல் முடியும்).

     புழுதியும், ஒலியும் படையின் பெருமை, வலி ஆகியவற்றை
முன்னுணர்த்தின; அது கண்டு கேட்டுச்சீறி எழுந்தான் இலக்குவன் என்று
அடுத்த பாட்டில் முடிகிறது. கோள் - கொலை சூழ்தல் ஆகும்.வலிய
என்றும் ஆகும். ‘ஏ’ ஈற்றசை.                                    25