240. | தன் அன தம்பியும், தாயர் மூவரும், சொன்ன தேர் வலவனும், தூய தோழனும், துன்னினர் ஏறலும், துழா துடுப்பு எனும் நல்நயக் காலினால் நடத்தல் மேயினான். |
தம்பி - சத்துருக்கனன்; தேர் வலவன் - சுமந்திரன்; தோழன் - குகன்; துழா துடுப்பு - துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும் என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு - மட்டை ஆகும். 63-2 |