241.அன்ன காதல்
     அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
     உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
     ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
     போய் மறைந்திட்டதே.

     ஏல்வை - பொழுது.                                     5-1