2420. | ‘பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன், நல் நெரும் பெரும் படை நல்கல் அன்றியே, என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?- மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்! |
‘மின்னொடும் பொரு உற - மின்னலோடும் ஒப்புக் கொள்ளுமாறு; விளங்குவேலினாய் - விளங்குகின்ற வேலினை உடைய இலக்குவனே!; பொன்னோடும் பொருகழல் -பொன்னானியன்று பொன்னோடு மோதுகின்ற கழலை அணிந்த; பரதன் -; போந்தனன் -வந்துள்ளான்; (எதற்கு) நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே - (என்னை அரசனாக்கி எனக்கு) நல்ல நெடிய பெரிய சேனையைத் தருதற்காக அல்லாமல்; என்னொடும்பொரும் - என்னோடு சண்டையிடுவான்; என இயம்பற் பாலதோ? - என்றுசொல்லலாமா?... (கூடாது என்றபடி) கழல், பொன்னாற் செய்யப்படுதலின் ‘பொன்னொடும் பொருகழல்’ ஆயிற்று.‘பொன்னொடும்’ என்பதைத் தனியே கொண்டு பொன்னொடும் பிடை நல்கல் எனக் கூட்டிப்பொருள் உரைப்பதும் உண்டு. பொன் தருதல்- அரசச் செல்வத்தைத் தருதல் என்று பொருள் படுதல்வழக்காற்றின் இன்மையும் இடையீடு இன்றிப் பொருகழல் என்பதனோடு அது மாறி முடிதலும் அமைதலின் அவ்வாறுரைக்க இயலாமையறிக. அரசர்கள்வசம் சேனையைத் தருதல் முறை ஆதலின் இராமனைஅரசன் எனக் கருதும் பரதன், அவன்பால் சேனைகளைத் தர வருகின்றானாதல் வேண்டும் என்றான்இராமன். 46 |