243.‘ஐய! நின்னுடைய
     அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
     மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
     தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
     உதவுவாய்’ என்றான்.

     ஒரீஇ - நீங்கி.                                          89-1