2438.‘வேண்டும் திறந்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு, இவ் உலருக்கு இடர் கொடுத்த புல்லலேன்.
மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு
ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ?

     ‘வேண்டும் திறத்தாரும் - எல்லாவற்றையும் விரும்பும் தன்மை
உடையவர்களும்; வேண்டா - (துன்பம் தருவது  என்று கருதி) விரும்பாத;
அரசாட்சி - அரசு ஆளும்தொழிலை; பூண்டு- (நீ அளித்த அளவிலேயே
ஆராயாது) மேற்கொண்டு; இவ் உலகுக்கு- இந்த உலகத்துக்கு; இடர்
கொடுத்த
- துன்பத்தைக் கொடுத்த; புல்லனேன் -அற்பனாகிய யான்;
(இனிச் செய்யத் தகுவது) மாண்டு முடிவது அல்லால் - இறந்தொழிவது
அல்லாமல்; மாயா உடம்பு இது கொண்டு - இப்போதும் அழியாத
உடம்பினைக் கொண்டு; ஆண்டு வருவது - அரசாட்சி செய்ய எண்ணுவது;
இனி, யார் முகத்தே நோக்கவோ -இனிமேல் யார் முகத்தைப்
பார்ப்பதற்காகவோ?

     யார் முகத்தையும் பார்க்க இயலாது என்றபடி. தன்னைத்தானே
புல்லன் என்று இராமன் வருந்திக் கூறினான். எல்லால் விரும்புல் தன்மை
உடையவரும் அரசாளுவதை விரும்பாமைக்கு அரசு துன்பம் தரும் என்பதே
காரணமாதலை “மழை வளம் கரப்பின் வான் பேரச்சம், பிழையுயிர் எய்தின்
பெரும் பேரச்சம், குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும்
நன்குடிப் பிறத்தல், துன்பம் அல்லது தொழுதகவு இல்” என்னும் (சிவப்.
வஞ்சி.25:100 - 104) சிலப்பதிகார அடிகளான் அறிக. இராமன் அரசாட்சியை
ஏற்க இசையாமல் இருந்தால் தொடர்ந்த துன்பங்கள் உலகுக்கு வந்திராது
என்று கருதி “உலகுக்கு இடர் கொடுத்த” என்றான்.                   64