245. | ‘வானின் நுந்தை சொல் மரபினால் உடைத் தானம் நின்னது என்று இயைந்த தன்மையால், ஊனினில் பிறந்து உரிமையாகையின் யான் அது ஆள்கிலேன்’ என, அவன் சொல்வான். |
2485 ஆம் பாடலின் மாற்றுவரும் இது. இராமன் கூறும் பாட்டைத் திருப்பிப் பரதன் கூற்றாகமாற்றியதாகும். தயரதன் சபையில் கூறிய சொல்லால் அரசு நின்னதாயிற்று; ஊனினில் பிறந்து- தயரதனிடத்தில் பிறந்து; நீ உரிமையாகையின் - நீ மூத்தவனாய் உரிமைபெற்றபடியால். யான் அது ஆள்கிலேன் என்றான் பரதன் என்க. இதை இராமன் கூற்றாகவும்உரைக்கலாம். 111-1 |