சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல் 2457. | எய்திய வேலையில், தமியள் எய்திய தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்; கைகளின் கண்மலளிளிர் புடைத்து, கால்மிசை, ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ! |
எய்திய வேலையில் - அந்தக் குடிலை அடைந்தபொழுது; ஐயன் அப்பரதன் -ஐயனாகிய அந்தப் பரதன்; தமியள் எய்திய தையலை - தனியளாய் வனம் புகுந்த சீதையை; நோக்கினன் - பார்த்து; சாலை நோக்கினான் - அவள் இருந்த குடிலையும்பார்த்து; கண்மலர் கைகளின் புடைத்து - மலர்போன்ற கண்களில் கைகளால்அடித்துக்கொண்டு; கால்மிசை - அப்பிராட்டியின் திருவடிகளில்; வீழ்ந்து -விழுந்து; அரற்றினான் - புலம்பினான். தமியள் எய்திய - குடிலில் தனியளாயிருந்த என்றும் ஆம். துக்க மிகுதிக்கண் கண்களில்அடித்துக்கோடல் வழக்கு. ‘அரோ’ ஈற்றசை. 83 |