2477.‘உந்தை தீமையும், உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்,
எந்தை ! நீங்க, மீண்டு அரசு செய்க’ எனா,
ிந்தை யாவதும் தெரியக் கூறினான்.

     ‘எந்தை - எம் தலைவனே!; உந்தை - உனக்குத் தந்தையாகிய
தசரதன்; தீமையும் - (செய்த) தீமையும்; உலகு - உலகத்துக்கு; உறாத
நோய்
-இதுவரை வராத துன்பத்தை; தந்த - கொடுத்த; தீவினைத் தாய்-
பாவ வடிவமான என்தாய் கைகேயி;  செய் தீமையும் - செய்த தீமையும்;
நீங்க - எல்லாம்போக; மீண்டு - நாட்டுக்குத் திரும்பிவந்து; அரசு
செய்க’
- அரசாட்சிசெய்வாயாக;  எனா - என்று; சிந்தை யாவதும்
தெரிய
- தன்மனக்கருத்து முழுதும் விளங்கும்படி; கூறினான்- சொன்னான்.

     இராமன் பிரிவினால் உலகைத் துன்புறச் செய்தது தயரதன் செய்த
தீமை. தயரதனை ‘உந்தை’ என்றான். இங்கு இராமனை மீள அழைப்பதற்கு
ஒரு காரணம் காட்ட விரும்புகின்றவன் ஆதலின், ‘உலக்குத் தந்தை செய்த
தீமை’ என்று அவனோடு நெருங்கிச் சொன்னான் என்க. இனி
“மன்னேயாவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று உன்னேன்”
எனத் துறந்தான். ஆதலால், அதுபற்றி உந்தை என்றான் எனலும் ஆம்.
இராமன் மீண்டு வந்து அரசேற்றலால் விளையும் நலம் இது எனக்
கூறினான்.                                                   103