2487.‘மலங்கி வையகம் வருந்தி வைக, நீ,
உலம் கொள் தோற் உனக்கு உறுவ செய்தியோ?
கலங்குறாவணம் காத்தி போந்து’ எனா,
பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான்.

     ‘வையகம் - நிலவுலகம்; மலங்கி - வருந்தி நிற்க; நீ-; உலம்கொள்
தோள் உனக்கு உறுவ செய்தியோ?
- கற்றூணைப் போன்ற தோள்களை
உடைய உனக்குரியதகுதியானவற்றைச் செய்வாயோ?; கலங்குறாவணம் -
(உலகம்) கலங்காதபடி; போந்து காத்தி’- வந்து காப்பாற்றுவாயாக; எனா-
என்று; பொலம் குலாவு தாள்- பொன் மயமான அழகு விளங்குகிற
திருவடிகளை; பூண்டு - பிடித்துக் கொண்டு; வேண்டினான்-.

     ‘உலம் கொள் தோள்’ உலகைத் துன்பம் நீக்கித் காத்தற்கே அன்றித்
தவம்செய்தற்கன்று எனக் குறிப்பால் உணர்த்தினானாம்.             113