2501.‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?

     தாய் பணிந்து உவந்தன- தாய் கட்டளையிட்டு
மகிழ்ச்சியடைந்தவையும்; தந்தை “செய்க” என ஏய - தந்தை செய்க எனக்
கட்டளையிட்டவையும் ஆகிய; எப்பொருள்களும் - எச் செயல்களையும்;
இறைஞ்சி - வணங்கி; மேற்கொளா- தலைமேற் கொண்டு நிறைவேற்றாத;
தீய அப்புலையனின் - கொடிய அந்தக் கீழ்மகனைவிட; செய்கை
தேர்கிலா
- நல்லது, தீயது அறியாத; நாய் எனத் திரிவது- நாயாகத்
திரிவது; நல்லது அல்லதோ? - நல்லது அல்லைாததோ? (நல்லதே).

     தக்கது, தகாதது அறியம் மக்கட் பிறப்பில் பிறந்துவைத்தும் தாய்
தந்தை பணியைநிறைவேற்றாத கீழ்மகனாக இருப்பதைவிட நாய்ப் பிறவியே
மேல் என்பதாகும் ‘ஓ’காரம்தேற்றம்.                             127