பரதன், இராமன் திருவடிகளை வேண்டிப் பெற்று முடிமேற் சூடிச் செல்லுதல் 2509. | விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான், ‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என, எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். |
பரதனும் -; வேறு செய்வது ஒன்று இன்மையின் - வேறு செய்யக் கூடியது ஒன்றும்இல்லதமையால்; ‘அரிது’ என எண்ணி - (இராமனைப் பிரித்து இருத்தல்) இயலாது என்றுகருதி; விம்மினன் ஏங்குறவான் - அழுது இளைத்து; ‘திருவடித்தலம் செம்மையின்தந்தீக’ என- உன் திருவடிநிலைகள் இரண்டையும் செப்பமாக எனக்கு அளித்தருளுக எனக் கேட்க; (இராமனும்) எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் - எல்லா உலக இன்பங்களையும் தருவனவாகிய தன் இரண்டு திருவடிம நிலைகளையும் நிலைகளையும் கொடுத்தருளினான். இம்மை, மறுமை என்றாற் போல எம்மை என்பதற்கு எப்பிறவியினும் (எல்லா வின்பங்களும்தருவன) எனப் பொருள் உரைத்தலும் ஒன்று. 135 |