இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல் 2513. | பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல் மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்; போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்; ஒது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். |
பரதன் -; பாதுகம் தலைக்கொடு - இராமனது திருவடி நிலையைச் சிரமேற் கொண்டு;பைம்புனல் மோது கங்கையின் கரை கடந்து - (பசிய) குளிர்ந்த நீர் மோதுகின்றகங்கையின் கரைகளைக் கடந்து; முந்தினான் - முற்பட்டு; போது உகும் கடிபொழில்அயோத்தி புக்கிலன் - மலர்கள் சிந்துகிற மணம் வீசும் சோலை சூழ்ந்த அயோத்திநகருக்குள் நுழையாமல்; ஓது கங்குலின் - சொல்லப்படுகிற இரவில்; நெடிது உறக்கம் நீங்கினான்- மிகவும் தூக்கம் ஒழிந்து... (மேல் முடியும்) முற்சென்ற பரதன் அயோத்திக்குள் செல்லவில்லை என்றார். 139 |