2261.‘அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந் தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்’
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை,

     ‘அன்றுஎனின் - (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி
சூட்டல்) இயலாதுஆயின்; அவனொடும் - அந்தஇராமனோடும்; அரிய
கானிடை
- வாழ்தற்கரியகாட்டிடத்து; நின்று- வாழ்ந்து;  இருந்தவம் -
பெரிய தவத்தை; இனிது -இனிமையாக; நெறியின்- செய்தற்குரிய
முறைப்படி; ஆற்றுவென் - செய்வேன்;  இனி-இதற்குமேல்; ஒன்று
உரைக்கின்
- (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்றுநடத்த
வற்புறுத்தினால்); என் உயிரை நீக்கு வென்- என் உயிரை அழித்துக்
கொள்வேன்; என்றனன் - என்று
சொன்னான்;என்றபோது - என்று
பரதன் சொல்லியபோது; இருந்த பேர் அவை -அங்கேஅமர்ந்திருந்த
அரசவையில் உள்ளார்......

     அரசவையில் உள்ளார்....‘வாழ்த்தினார்’(2263) எனப் பின்வரும்
கவியிற் சென்றுமுடியும். வாழ்த்தினார் என முடிதலின் அரசவை என்பதற்கு
அரசவையில் உள்ளார் எனஉரைத்தாம். ஒன்று இராமனைக் கொணர்ந்து
முடிசூட்டல், இரண்டு இராமனோடு காட்டில் தவம்செய்தல், மூன்று
தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல்  என்றானாம்  பரதன்.              18