9605. | 'நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின், |
| உதிர நீர் நிறைந்த காப்பின், |
| கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின், |
| இன மள்ளர் பரந்த கையில், |
| படுங் கமல மலர் நாறும் முடி பரந்த |
| பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை, |
| தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே |
| எனப் பொலியும் தகையும் காண்மின்! |
|
நெடும் படை வாள் நாஞ்சில் உழுநிணச் சேற்றின் - நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்; உதிரநீர் நிறைந்த காப்பின் - இரத்தமாம் நீர்நிறைந்த தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு படி கிடந்த கரும்பரப்பின்- (விரைந்து செல்லும் எருமைகளோடு தரையில் கிடந்த பரம்பு அடிக்கும் பலகை கொண்டுள்ளது போல) விரைந்து செல்லும் யானைப்பகடு படிந்த கரிய பெரும்பரப்பையுள்ளதாலும்; இனமள்ளர் பரந்த கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள மக்கள் போல்) இனமொத்த வீரர் பரவிய பக்கங்கள் உள்ளதாலும்; படுங்கமல மலந் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த -(களையுள்ள தாமரை மலரோடு நாற்று முடிகள் கிடந்த பெரிய களங்கள் போல) தலைமாலையாகத் தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய கிடக்கைகள் உள்ளமையாலும்; பண்ணை - (வயல்) வீரரின் பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே - எனப் பொலிவும் தகையும் காணீர். பெரிய மருதநிலம் பரப்பினை உடைய (போர்க்களம்) நறுமணம் வீசும் வயல்; எனப் பொலியும் தகையும் காண்மின் - எனத்தோன்றும் தன்மையையும் பாருங்கள். |
(25) |