| 9775. | விலங்கலும் வேலையும், மேலும் கீழரும், |
| அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும், |
| கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காலக் காற்று, |
| இலங்கையை எய்தின, இமைப்பின் வந்துஅரோ. |
| |
விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்; மேலும் கீழரும் - மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி- சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் - பாயும் எல்லா உலகங்களையும்; கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து திரிந்த; ஓர் ஊழிக்காலக் காற்று- பிரளய காலப் புயல்; இமைப்பின் வந்து - நொடிப்போதில் வந்து; இலங்கையை எய்தின- இலங்கையை அடைந்தது. (அரோ - அசை) |
(72) |
| காற்று குதிரைகளைக் குறித்தது |