பக்கம் எண் :

102பாரதம்விராட பருவம்

தன்மைந்தனுக்கு ஓதினான் என்று உரைத்து, திருதராட்டிரன்
துரியோதனனுக்குச் சொன்னது இவ்வுபாய மென்பாரு முளர்.

     ஓகாரம் - எதிர்மறை.  காளைபோன்றவனைக் காளையென்றது,
உவமவாகுபெயர்.  காளை - இளவெருது; இது-கம்பீரமான தோற்றத்துக்கும்,
நடைக்கும், வலிமைக்கும்உவமை.  'கார்' என்ற நிறப்பெயர், அதனையுடைய
மேகத்துக்குப் பண்பாகுபெயர்.  'தேடும் விரகு' என்றஇடத்து, மகரக்குறுக்கம்
காண்க.  மைந்தனுக்கு ஓதினா னென இயையும்.                    (164)

6.-ஓர் ஒற்றன்விராடநகரத்துநிலைமையை யெடுத்துக்கூறுதல்.

ஒற்றாளிலொருவன்பணிந்தென்றுமெவ்வாழ்வுமுண்டாகியே
விற்றானைவெம்போர்விராடன்றன் வளநாடுமேம்பட்டதால்
மற்றாழ்புயக்கீசகன்றானுமொருவண்ணமகள்காரணத்து
இற்றானெனுஞ்சொல்லுமுண்டென்றுநிருபற்கெடுத்தோதினான்.

      (இ -ள்.)(அப்பொழுது),-ஒற்று ஆளில் ஒருவன்-(தேடிவந்த)
ஒற்றர்களுள்ஒருவன்,-பணிந்து - வணங்கி,-'வில் தானை-வில்லையுடைய
சேனையையும்,வெம் போர்-(பகைவர்க்குக்) கொடிய போரையுமுடைய,
விராடன்தன் -விராடராசனது, வளம் நாடு ஏ - வளப்பம் பொருந்திய
மச்சதேசமொன்றே,என்றுஉம் - எந்தநாளைக் காட்டிலும், எ வாழ்வுஉம் உண்டு
ஆகி -எல்லாவாழ்வுகளும் உள்ளதாய், மேம்பட்டது -(மற்றையெல்லாநாடுகளினும்இப்பொழுது) மேன்மைப்பட்டிருக்கின்றது; மல் -
மற்போரில்வல்ல, தாழ்-(முழங்காலளவும்) நீண்டு தொங்குகின்ற, புயம் -
கைகளையுடைய, கீசகன்உம்-கீசகனென்பவனும், ஒரு வண்ணம்மகள் காரணத்து
- அலங்காரஞ்செய்கின்றஒரு (பணிப்) பெண்ணை விரும்பிய காரணத்தால்,
இற்றான் - இறந்தான், எனும்சொல்லும்-என்கிற ஒருவார்த்தையும், உண்டு -
உளது', என்று-, நிருபற்கு-துரியோதனராஜனுக்கு, எடுத்து ஓதினான் - எடுத்துச்
சொன்னான்; (எ - று.)     

    மழைவளநிலவளத்தோடு அறம்தவறியகீசகன் கொல்லப்பட்டானென்று
சொல்லப்படுவதையும் ஓரொற்றன் துரியோதனனுக்குத் தெரிவித்தானென்க.
கீசகன் - விராடன் மனைவியாகிய சுதேஷ்ணையின் உடன் பிறந்தவன்.
கீசகனும்என்றஉம்மை - வீமசேனனைப்போன்ற பெருவீரராலன்றிப் பிறராற்
கொல்லமுடியாத அக்கீசகனது பலவாயிரம் யானைபலங்கொண்ட வலிமையின்
உயர்வைத் தெரிவித்து நின்றது.  வண்ணமகள் - ஒப்பனைசெய்பவள்.
ஒருவண்ணமகள் காரணத்துக் கீசகன் இற்றா னென்ற செய்தியை எடுத்துக்
கூறியது, அங்கு வீமன் இருத்தல்கூடு மென்று குறிப்பித்தற்கு.

     எவ்வாழ்வும், எகரவினா - எஞ்சாமைப்பொருளை யுணர்த்திற்று.
வாழ்வுகள் - ராஜாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம்,
அடிமை என்னும் அஷ்டைசுவரியங்கள்; உம்மை-முற்றுப்