பொருளது. பிரிநிலையேகாரம், பிரித்துக் கூட்டப்பட்டது, வில் - வேல் வாள் முதலிய மற்றை ஆயுதங்கட்கும் உபலக்ஷணம். வளம்-நிலவளம் நீர்வளம் முதலியன. கைகள் முழங்காலளவும் நீண்டிருத்தல், உத்தமவிலக்கணம். (165) 7.-விராடநகரத்துநிரைகவர்வதன்மூலம் பாண்டவரைப்பற்றி யறியலாமென்று கர்ணன்கூறுதல். வண்டார்விராடன்றன்வளநாடுதண்டான்மலைந்தேதொறுக் கொண்டாலவன்சூழலிற்சூழும்வினயங்குறிப்போரிருப்பு உண்டாகினிரைமீளுமின்றாகின்மீளாதென்னுட்கோளிதென்று எண்டாழுமிதயத்துநிருபற்குஉரைத்தானிரவிமைந்தனே. |
(இ -ள்.) (அதுகேட்டு),-இரவி மைந்தன் - சூரியபுத்திரனாகிய கர்ணன்,- 'வள் தார் விராடன்தன்-வளமான (செங்கழுநீர்) மாலையையுடைய விராடராசனது, வளம் நாடு - வளப்பம்பொருந்தியநாட்டை, தண்டால் - (நமது) சேனைகளைக்கொண்டு, மலைந்து-போர்செய்து, தொறு - (அவனது) பசுக்கூட்டங்களை, கொண்டால்-(நாம்) கவர்ந்து ஓட்டிக்கொண்டு வந்தால், அவன் சூழலில் - அவனது நாட்டில், சூழும் வினயம் குறிப்போர் இருப்பு - பொருந்திய வணக்கத்தைக் காட்டுகின்றவர்களான பாண்டவர்கள் அங்கு இருத்தல், உண்டு ஆகில்-உள்ளதாகுமானால், நிரை மீளும் - (நாம் கவர்ந்த) பசுக்கூட்டம் மீட்கப்படும்: இன்று ஆகில் - (அவர்களிருப்பு) இல்லையானால், மீளாது - (அது) மீட்கப்படாது; என் உள் கோள் இது - என் மனத்திற் பொருந்திய எண்ணம் இதுவாகும்,' என்று-, தாழும் எண் இதயத்து நிருபற்கு உரைத்தான் - இழிந்த எண்ணங்களுள்ள மனத்தையுடைய துரியோதனராசனுக்குச் சொன்னான்; (எ - று.) மகாபலசாலியாய்ச் சேனைத்தலைவனாயிருந்த கீசகனும் தம்பிமாரோடு இறந்துபோனதனால், அங்குப் பாண்டவர்களிருந்தாலொழிய நிரை மீளாதென்று, பாண்டவர்கள் அங்கு இருத்தலையும் இராமையையுங் கண்டுபிடித்தற்கு உபாயங்கூறினான் கர்ணனென்க. தார்க்கு வண்மை - மிக்க வாசனை வீசுதலும், தேன் மழைபொழிதலும். சூழும் வினயங்குறிப்போர் - ஆராய்ந்துசெய்யுந்தந்திரத்தைக் கருதியுள்ளவரெனினுமாம்; இனி, சூழும் வில்நயம் குறிப்போர் எனப்பிரித்து - வளைந்த வில்லின் வித்தையில் வல்லவர் எனினும்பொருந்தும். எண்தாழும் இதயம் - ஆலோசனையில் அழுந்திக்கிடக்கின்ற மனமுமாம். கோள்- கொள்ளப்பட்டது; எண்ணம். இரவி = ரவி. (166) 8.-விராடநகரில்தெற்குப்பக்கத்து நிரைகோடல். தக்கோர்தகுஞ்சொற்கள்கேளாததுரியோதனன்சொல்லினான் மிக்கோர்மிலைச்சுஞ்செழுந்தாமவிறல்வெட்சிமிலைதோளினான் |
|