திக்கோதையெழவிம்மமுரசங்களரசானதிரிகர்த்தர்கோன் அக்குரோணிபடையோடுபோயானடித்தானவன்சார்பிலே. |
(இ -ள்.) தக்கோர் தகும் சொற்கள் கேளாத - பெரியோர்களது தக்க நல்வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடத்தலில்லாத, துரியோதனன்-, சொல்லினான் - கட்டளையிட்டான்; (அதனால்), அரசு ஆன திரிகர்த்தர் கோன் - (பல அரசர்க்குத்) தலைவனான திரிகர்த்தராஜன்,-மிக்கோர் மிலைச்சும்-மேலான போர்வீரர் அணிகின்ற, செழு - செழுமையான, விறல் - வலிமையைக் குறிக்கின்ற, வெட்சி தாமம் - வெட்சிப் பூமாலையை, மிலை - தரித்த, தோளினான் - தோள்களையுடையவனாய்,-திக்கு ஓதை எழ - திக்குக்களிலெல்லாம் எதிரொலி உண்டாம்படி, முரசங்கள் விம்ம - பேரிகை வாத்தியங்கள் முழங்க, அக்குரோணி படையோடு - ஓர் அகௌஹிணி சேனையுடனே, அவன் சார்பிலே - அவ்விராடனது நாட்டினிடத்தே, (தெற்குப் பக்கத்தே), போய்-, ஆன் அடித்தான் - பசுக்கூட்டங்களைக் கவர்ந்தோட்டினான்; (எ - று.) துரியோதநன் - (பகைவர்க்குக்) கொடிய போரையுடையவன். துரியோதனன் சொல்லினான் - துரியோதனனதுகட்டளைச் சொல்லினாலென்றுமாம். வெட்சியென்னும் மரத்தின்பெயர், அதன்மலர்க்கு முதலாகுபெயராம்.வெட்சி - பகைநிரைகவரச்செல்லும் வீரர் அணியும் மாலை. இமயமலைக்கும்விந்தியமலைக்கும் இடையி லுள்ள தான ஆர்யாவர்த்தமென்னும் புண்யபூமிக்குவடமேற்றிசையிலுள்ளது திரிகர்த்தேய மென்பர். இத்தேசத்து அரசன் -சுசர்மா. அக்குரோணி - வடமொழிச் சிதைவு; அது - தேர் இருபத்தோராயிரத்தெண்ணூற்றெழுபது, யானை இருபத்தோராயிரத் தெண்ணூற்றெழுபது, குதிரைஅறுபத்தையாயிரத்து நூற்றுப்பத்து, காலாள் லக்ஷத்தொன்பதினாயிரத்துமுந்நூற்றைம்பது; ஆக - இரண்டு லக்ஷத்துப் பதினெண்ணாயிரத்தெழுநூறுகொண்டது. (167) 9.-பகைவர் நிரைகவர்ந்ததைநிரைகாவலர் விராடனுக்குக் கூறுதல். கரைகாணவரிதானகடலொத்தவெஞ்சேனைகைசூழவும் தரைகாவல்பெறுதோளினாண்மைப்பெருங்கேளிர்தற்சூழவும் விரைகாலுமலரோடையெனுமாறிருக்கும்விராடற்குநல் நிரைகாவனின்றோர்பணிந்தோதினார்தெவ்வர் நிரைகொண்டதே. |
(இ -ள்.) (உடனே),-நல் நிரை - நல்ல பசுக்கூட்டங்களுக்கு, காவல் - காவலாக, நின்றோர் - நின்ற இடையர்கள்,-கரை காணஅரிது ஆன- கரையைக்காணுவதற்கு அரியதாகிய, கடல் - கடலை. ஒத்த-போன்ற, வெம் சேனை - கொடிய சேனை, கை சூழஉம் - (தன் பக்கங்களிற்) சூழ்ந்து நிற்கவும், தரை காவல் பெறு - பூமியைக் காக்குந்தொழிலைப் பெற்ற, தோளின் ஆண்மை - புஜபலத்தாலாகிய வீரத்தன்மையையுடைய, பெருங்கேளிர் - சிறந்த உறவினர்களும் |