நாலைந்து தொடை - சிலதொடை என்றலுமாம், முகம் மாற - முகம் ஒளியிழக்க என்றலுமாம். வினைத் தேர் - சித்திரவேலைத்திறமமைந்த தேருமாம். (174) வேறு. 16.-கங்கபட்டனது தூண்டுதலாற்பலாயனன் போர்க்கு எழுதல். திண்டிறற்சிலைவிராடனைத்தேரொடும்பிணித்துக் கொண்டுபோதலுங்குருகுலக்கோமகமுனிவன் கண்டுதன்றிருத்தம்பியைக்கடைக்கணித்தருள மண்டுதீயெனவெழுந்தனன்மடைத்தொழில்வல்லான். |
(இ -ள்.) (இவ்வாறு திரிகர்த்தராஜன்), திண் திறல் சிலை - மிக்க வலிமையுள்ள வில்லையுடைய, விராடனை-, தேரொடுஉம் பிணித்து-(தன்) தேருடன் சேர்த்துக்கட்டி, கொண்டுபோதலும் - கொண்டுபோனவளவில், -குரு குலம் கோமகன் முனிவன் - (கங்கபட்டனென்னும் பெயரோடு) முனிவேடங்கொண்டுகரந்துறைகின்ற குருகுலத்தில்தோன்றிய சிறந்த அரசனான யுதிஷ்டிரன், கண்டு - (அதனைப்) பார்த்து, தன் திரு தம்பியை - தனது சிறந்த தம்பியாகிய (பலாயனனென்னும்பெயர்பூண்ட) பீமசேனனை, கடைக் கணித்தருள - அருளொடுகடைக்கண்ணாற் பார்த்து (விராடனை விடுவிக்கவேண்டுமென்று) குறிப்பிக்க,-மடை தொழில் வல்லான் - உணவு சமைத்தற்றொழிலில் வல்லவனான அப்பலாயனன், மண்டு தீ என - மூண்டெரிகின்ற நெருப்புப்போல, எழுந்தனன்-(போர்செய்தற்குக்) கொதித்தெழுந்தான்; (எ - று.) இதனால் பாண்டவரது நன்றியறிவுடைமையும், தமையனார் கட்டளையை எதிர்பார்த்து அதனைக்கடவாதுநிற்கும் அத்தம்பியரது தன்மையும் நன்கு விளங்கும். கோமகமுனிவன் - ராஜரிஷி யென்றவாறுமாம். திரு- தைரியலட்சுமியுமாம். மடைத்தொழில்-உணவுக்கு உரியதொழில்; எனவே, சமையலாயிற்று. இதுமுதல் ஐம்பத்துநான்கு கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஈற்றுச்சீரும் மாச்சீர்களும், நடுச்சீர்மூன்றும் விளச்சீர்களுமாகிய நெடிலடி நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். (175) 17.-பலாயனன் பொருதுதிரிகர்த்தனைப் பற்றுதல். உகத்தினீறுதோறோதையோடூதையாந்தாதை நகத்தினாலுயர்நகங்களைநறுக்குமாபோலத் திகத்தபூபதிதேரினைவேறொருதேரால் தகர்த்துவில்லொடுமகப்படுத்தினனவன்றனையும். |
(இ -ள்.) (எழுந்த பலாயனன்),-தாதை ஆம் ஊதை - (தனது) தந்தையாகிய வாயு, உகத்தின் ஈறு தோறு - யுகமுடிவு [கற்பாந்தகாலந்]தோறும், ஓதையோடு - பேரொலியுடனே, நகத்தினால் - |