பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 113

வடிவமும்பெற்று அக்கடவுளருளால் அப்பிரானுக்கு வாகனமும் கொடியுமாக
அமைந்தன வென்று அறிக.                                     (179)

21.-சூரியாத்தமன வருணனை.

துன்னலன்றனைத்தோளுறத்துவக்கிமுன்றந்த
பன்னுநூன்மடைப்பலாயனற்கண்டுபாவித்தாங்கு
அன்னகாலையிலருக்கனைத்தேரொடுமணைத்து
மன்னுதன்றிசைவன்சிறைப்படுத்தினன்வருணன்.

      (இ -ள்.) அன்ன காலையில் - அப்பொழுது, துன்னலன் தனை -
பகைவனாகிய திரிகர்த்தனை, தோள் உற துவக்கி-தோள்களை அழுந்தக் கட்டி,
முன் தந்த-எதிரிலே கொண்ர்ந்து கொடுத்த, பன்னும் - சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற, நூல் மடை பலாயனன் - பாகசாஸ்திரத்தையுணர்ந்து
அதன்முறைப்படி சமைத்தலையுடைய பலாயனனென்னும் வீமனை, கண்டு-
பார்த்து,-வருணன்-, ஆங்கு பாவித்து - அவ்வாறே (தானுஞ்செய்வதாகப்)
பாவனைசெய்து, அருக்கனை-சூரியனை, தேரொடுஉம் அணைத்து-தேருடனே
சேர்த்துக் கொண்டுபோய், மன்னு தன் திசை-நிலைபெற்ற தனது [மேற்குத்]
திக்கில், வல் சிறை படுத்தினன் - வலிய காவலிலே அகப்படுத்தினான்; (எ- று.)

     மேற்கிற் சூரியன் இயல்பாக அஸ்தமித்து மண்டலத்தோடு மறைந்து
போனதை, வீமன்போல வருணன் சூரியனைத் தேரோடு சிறைப்படுத்தியதாகக்
குறித்தது - தற்குறிப்பேற்றவணி. புகழ் விளைக்குஞ் சிறந்ததொருசெயலை
ஒருவர்செய்யக் கண்டவிடத்து, அங்ஙனம் தாமுஞ் செய்துசிறப்புற
வேண்டுமென்னுங் கருத்தும் அதற்கேற்றமுயற்சியும் பிறர்க்கும் உண்டாதல்,
உலகவியல்பு.  வீமன் திரிகர்த்தனைக்கட்டியது சூரியாஸ்தமநத்திற்குச் சிறிது
முன்னரென்பது போதரும்.  வருணன் மேற்குத் திக்குப்பாலகனாதலால்,
'தன்திசை' எனப்பட்டது.                                      (180)

22.-கங்கபட்டன்சொன்னபடிவிராடன் திரிகர்த்தனை விட்டிடுதல்.

கங்கனென்றுதன்னருகிருந்தருளியகடவுள்
துங்கமாமுனிசொற்படிதோள்வடநெகிழ்த்துச்
சிங்கமன்னவத்திகத்தனைச்செல்கெனவிடுத்தான்
அங்கமாமதிலயோத்திமன்றேருமொன்றளித்தே.

      (இ -ள்.) அங்கம் மா மதில் அயோத்தி மன்-உறுப்புக்களமைந்த பெரிய
மதிலினையுடைய அயோத்தியாநகரத்தின் அரசனாகிய விராடன்,-கங்கன் என்று
- கங்கபட்டனென்று பெயர்கொண்டு, தன் அருகு இருந்தருளிய -
தன்பக்கத்தில் எழுந்தருளியிருக்கின்ற, கடவுள் - தெய்வத்தன்மையையுடைய,
துங்கம் மா முனி - உயர்ச்சி வாய்ந்த மகாமுனிவராகிய தருமபுத்திரரது,
சொல்படி-சொல்லின்படி, சிங்கம் அன்ன அ திகத்தனை-சிங்கம்போன்ற அந்தத்
திரிகர்த்த