என்றுசொல்லி, நகையா - பரிகாசமாகச்சிரித்து, அரைத்த ஆரம்உம் - அரைத்தசந்தனக் குழம்பையும், ஆரம் உம் - முத்துமாலைகளையும், மாலைஉம் - பூமாலைகளையும், அணிந்து-, என்வரை தடபுயம் வளர்த்தது - என்னுடைய மலைபோன்ற [வலிய] பெரிய தோள்களைவளர்த்தது, மகளிர் போர் பொரஓ - (பகைவரோடு யான் போர் செய்யாமற்) பெண்பாலார் (சென்று) யுத்தஞ் செய்தற்காகவோ? (எ - று.)- இச்செய்யுளில் 'நகையா' என்ற எச்சம், அடுத்த செய்யுளில் 'என்றான்' என்ற முற்றைக் கொள்ளும். யான்,எனது வளர்ந்த வரைத்தடந்தோள்களாற் பொரவேண்டாவோ? பொருது வெற்றி பெறவேண்டாவோ? என்றான். கதுமென- விரைவுப்பொருளைத் தருவதோர் இடைச்சொல். ஓதி - பெண்மயிர்; இங்கு அதனையுடையவளுக்குச் சினையாகுபெயர். நரைத்த ஓதி - அடையடுத்த ஆகுபெய ரென்க. 'நரைத்த ஓதி' என்ற பெயர் - இங்கு அண்மைவிளி யாதலின், இயல்பாயிற்று. நன்று - இகழ்ச்சிக்குறிப்பு; நன்றன் றென்றபடி. இங்குக் கூறிய நகை, இகழ்ச்சி பொருளாக வீரத்தெழுந்த வெகுளிநகை. (188) 30. | கனைகடற்படையுடனிரைக்கணங்கவர்ந்தவரை முனைபடப்பொருதிமைக்குமுன் முதுகுகண்டிடுவேன் வினைமுகத்தினையறிந்துதேர்விசையுடன்விடவென் நினைவொடொப்பதோர்சாரதி நேர்ந்திலனென்றான். |
(இ -ள்.) கனை கடல் படையுடன் - ஆரவாரஞ்செய்கின்ற கடல் போன்ற சேனையோடு (வந்து), நிரை கணம் கவர்ந்தவரை - (நமது) பசுக்கூட்டங்களைக் கொள்ளைகொண்ட துரியோதனாதியரை, முனை - போர்க்களத்தில், பட - அழியும்படி, பொருது - (யான் ஒருவனே போய்ப்) போர்செய்து, இமைக்கும் முன் - ஒருமுறை கண்ணிமைக்கும் பொழுதைக்கு முன்னமே [மிகவிரைவில்], முதுகு கண்டிடுவேன்-புறங்கொடுத் தோடச் செய்வேன்; (ஆனால்), -வினை முகத்தினை அறிந்து - போர்தொழிலின் தன்மையைத் தெரிந்து, (அதற்கு ஏற்ப), தேர் - தேரை, விசையுடன் விட - வேகமாக நடத்துவதற்கு, என் நினைவொடு ஒப்பது ஓர் சாரதி - என்மனத் தோடொத்த தன்மையையுடைய ஒரு பாகன், நேர்ந்திலன் - (இப்பொழுது எனக்குக்) கிடைத்தானில்லை, என்றான் - என்று சொன்னான்; (எ - று.)- என் நினைவிற்கு ஏற்ற சாரதிமாத்திரங்கிடைப்பனாயின், உடனே பொருது வெல்வே னென்றபடி. நேர்ந்திலன் - எதிர்மறையாண்பாலிறந்தகால முற்று; தன்மையொருமை முற்றாய், சாரதியைப்பெற்றிலே னென்றலு மொன்று. (189) 31.-பிருகந்நளைதேர்செலுத்தவல்ல ளென்று விரதசாரணி கூறுதல். உத்தரன்புகலுறுதிகேட்டொப்பனைக்குரியாள் கொத்தரம்பொருகூரயிற்குமரனைக்குறுகி |
|