பக்கம் எண் :

122பாரதம்விராட பருவம்

34.-உத்தரன் தனது நகரத்து வடபுறஞ் சேர்தல்.

விலங்கன்மாமதில்களும்புறவீதியுங்கடந்தாங்கு
இலங்குநேமியொன்றுடையதேரென்னலாந்தேர்மேல்
துலங்குபேரொளியருக்கனிலுருத்தெழுதோற்றத்து
அலங்கலுத்தரனுத்தரதிசையைவந்தடைந்தான்.

      (இ -ள்.) துலங்கு பேர் ஒளி அருக்கனில் - விளங்குகின்ற மிக்க
ஒளியையுடைய சூரியன்போல, உருத்து எழு - மிக்கு விளங்குகின்ற,
தோற்றத்து - காட்சியையும், அலங்கல் - (நிரைமீட்டற்குரிய கரந்தைப்பூ)
மாலையை யுமுடைய, உத்தரன்-, -இலங்கும் நேமி ஒன்று உடைய தேர்
என்னல் ஆம் - விளங்குகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய (சூரியனது)
இரதமென்று (ஒப்புமை) சொல்லத்தக்க, தேர்மேல் - சிறந்ததொரு தேரிலே
(ஏறி),- விலங்கல் மாமதில்கள்உம் - மலைபோலுயர்ந்த பெரிய மதில்களையும்,
புறம் வீதிஉம் - (நகரத்தின்) வெளிவீதிகளையும், கடந்து - தாண்டி,
உத்தரதிசையை - (அந்நகரத்தின்) வடக்குப்பக்கத்தை, வந்து அடைந்தான் -;
(எ - று.)

     'உத்தரனுத்தரதிசையை வந்தடைந்தான்' என்ற இடத்தில்
சொற்சமத்காரங்காண்க; உத்தரதிசையையடைதற்கு உரியன் உத்தர னென்பது
போதரும்,அருக்கனில் உத்தரன் உத்தரதிசையை யடைந்தான் என்று
இயைத்து,இலங்குநேமியொன்றுடைய தேரிலேறித் துலங்குபேரொளியருக்கன்
(உத்தராயணத்தில்) வடபுறஞ்செல்லுதல்போல, உத்தரன் தேர்மேல் உத்தர
திசையை யடைந்தானென்று கருத்துக் காணலாம்.  சூரியனது தேர் -
மிகவிரைந்து செல்லுதற்கு உவமை; "ஒற்றைத்தனி யாழித்தேரென்ன
வோடுவதோர், கொற்றநெடுந்தேர்" என்றார், பிறரும்.  விலங்கல் -
(ஊர்க்குஒருபுறமாக) விலகிநிற்பது என்று காரணப்பொருள்.  திருக்குறளில்,
"வாய்ந்தமலை" என்ற இடத்தில் பரிமேலழகர் இடையதன்றி ஒருபுடையதாதலை
மலைக்கு வாய்ப்பென்றமை காண்க.                             (193)

35.-உத்தரன் துரியோதனனது சேனையைக்காணுதல்.

விண்கொளாமதிமேன்மைகொண்மீனினமென்ன
மண்கொளாவிறன்மன்னுடைவரம்பில்வான்படையை
எண்கொளாமனத்திராகவன் றிருக்குலத்திளைஞன்
கண்கொளாவகைபுகுந்துதன்கண்ணுறக்கண்டான்.

      (இ -ள்.) எண் கொளா மனத்து - (சேனையின் தன்மை இன்னதென்று)
ஓர் எண்ணத்தைக் கொள்ளாத மனத்தையுடைய, இராகவன் திரு குலத்து
இளைஞன் - ஸ்ரீராமபிரான் திருவவதரித்த சிறந்த சூரிய குலத்துத் தோன்றிய
சிறுவனான உத்தரகுமாரன்,-கண்கொளா வகை புகுந்து - (காண்பவர்)
கண்களுக்கு எட்டாதபடி [மிக விரைந்து] சென்று,-(அங்கே),-விண் கொளா மதி
- ஆகாயத்தில் தோன்றாத [பூமியில் தோன்றியதொரு] சந்திரனையும், மேன்மை
கொள் மீன் இனம் என்ன - (அச்சந்திரனைச்சூழ்ந்த) மேன்மைபெற்ற