பக்கம் எண் :

124பாரதம்விராட பருவம்

      (இ -ள்.) மை நெடுங் களிறு - கரிய பெரிய ஆண்யானை போன்ற,
உரன் உடை - வலிமையையுடைய, விராடர் கோன் -
விராடதேசத்தார்க்கரசனது, மைந்தன் - குமாரனாகிய உத்தரன்,-
(அந்தத்துரியோதனன் படையைக்கண்ட மாத்திரத்தில் அச்ச மிகுதியால்),
கருத்து அழிந்து - மனங்கலங்கி, நா புலர்ந்து - நாக்கு வறண்டு, உயிர்ப்பு
மேல் விஞ்சி - பெருமூச்சு மேன்மேலும் அதிகமாகப் பெற்று, கை நடுங்கஉம் -
கைகள் நடுக்கமடையவும், கால் நடுங்கஉம் - கால்கள் நடுக்கமடையவும், மெய்
நடுங்கவும் - உடம்பு நடுக்கமடையவும், சொல் நடுங்கஉம் - வார்த்தை
தடுமாறவும், சுடர் முடி நடுங்கஉம் - ஒளியையுடைய கிரீடம் - நடுங்கவும்,
சோர்ந்தான் - தளர்ந்தான் [உணர்வழியலானான்]; (எ - று.)

     இதுவரையிற் காணாத காட்சியைக் காணவே, உத்தரனுக்குப்
பேரச்சமுண்டாயிற்றென்க.  கைநடுங்குதல் முதலியன - அச்சத்தின் செயல்கள்.
முடி - முடியிற் கவிக்கப்படுவது; கிரீடத்திற்குக் காரணப்பெயர்.  களிறு-
யானைச் சேனையையுடைய என்றலுமொன்று.  உரன் என்றதில் தேகபலம்
மநோபலம் ஆயுதபலம் சேநாபலம் முதலிய பலவகை வலிமைகளும்
அடங்கும். (இரண்டாமடியில், யகரவொற்றுஇடைவந்த ஆசெதுகை காண்க.
பொதுநகரத்துக்கும் சிறப்புனகரத்துக்கும் ஒலிவடிவில் மிக்க வேறுபாடு
இல்லாமை பற்றி, மூன்றாமடியில் னகரம் எதுகையாய் நின்றது.)        (195)

37.-இதுவும், அடுத்தகவியும் - பிருகந்நளை  உத்தரனுக்குத்
தேறுதல் கூறுதலைத் தெரிவிக்கும்.

அஞ்சலஞ்சனீபகைவரையாருயிரடுதல்
துஞ்சலென்றிவையிரண்டலாற்றுணிவுவேறுண்டோ
வெஞ்சமந்தனில்வந்துபுண்படாதினிமீண்டால்
வஞ்சநெஞ்சுடைவஞ்சியரென்சொலார்மறவோய்.

                    மூன்றுகவிகள் - ஒருதொடர்.

    (இ - ள்.)(அப்பொழுது உத்தரனை நோக்கிப் பேடி)- 'மறவோய் -
வலிமையை யுடையவனே! நீ -, அஞ்சல் அஞ்சல் - பயப்படாதே பயப்படாதே;
பகைவரை ஆர் உயிர் அடுதல் - பகைவர்களை அரிய உயிரழியச் செய்தலும்
[கொல்லுதலும்], துஞ்சல் - (தாம்) இறத்தலும், என்ற இவை இரண்டு அலால் -
என்ற இவ்விரண்டு தொழில்களுள் ஒன்றல்லாமல், வேறு துணிவு உண்டுஓ -
(போர்க்கு வந்தவர்கட்கு) வேறொரு உறுதி உள்ளதோ? [இல்லை]; வெம் சமம்
தனில் வந்து - கொடிய போர்க்களத்திற் புகுந்து, புண்படாது -
விரணப்படாமல், இனி-, மீண்டால் - திரும்பி வாளாசென்றால் வஞ்சம் நெஞ்சு
உடை வஞ்சியர் - வஞ்சனையுள்ள மனத்தையுடைய வஞ்சிக்கொடிபோல
மெல்லியலாரான மாதர்கள், என் சொலார் - என்சொல்லி இகழமாட்டார்கள்?
(எ - று.)

      கீழ்இவன் மகளிர் முன்னிலையில் வீரவாதங் கூறிவந்ததனால், 'வஞ்சிய
ரென்சொலார்' என்றாளென்னலாம்.  மகளிரும் பரிகசிப்ப