துவசங்களையுடைய பகைவர்களை, தனி தனி ஓட்டி - தனித்தனியாக ஓடும்படி செய்து, நிரைஉம் - பசுக்களையும், பெயர்த்து நல்குவேன் - (அவர்களிடத்தினின்று) மீட்டுக்கொடுப்பேன்,' என்று உரைத்தனள் - என்று சொன்னாள்; (எ - று.) உத்தரனுக்குச் சைத்தியோபசாரஞ் செய்து தேற்றி, பேடிவடிவான அருச்சுனன் தான் பகைவென்று ஆநிரைகளை மீட்டுத்தருவேனெனக் கூறினனென்க. பீஷ்மருக்குப் பனைக்கொடியும், துரோணருக்கு வேதக்கொடியும், அசுவத்தாமனுக்கு அன்னக்கொடியும், கர்ணனுக்குக் கச்சைக்கொடியும், துரியோதனனுக்குப் பாம்புக்கொடியும் முதலாக அனைத்தும் அடங்க, 'பல்கொடி' என்றாள். வெயர்த்தல் - புழுங்குதல்; இது - இங்கே, அச்சத்தின் மெய்ப்பாடு. பனிநீர் - ஒருவகை வாசனை நீர். 'தனித்தனி ஓட்டி' என்றது - இருவர் ஒருவழிச்செல்லாதவாறு சிதறடித்தென்றபடி. (199) 41.-உத்தரன் குதித்தோட, பிருகந்நளை அவனைப்பிடித்துவந்து தேர்க்காலிற் கட்டுதல். கொடித்தடந்தனித்தேரினின்றுகைத்துமுன்குதியா அடித்தலம்பிடரடித்திடவோடலுமவனைத் தொடித்தடம்புயமிரண்டையுந்தொடர்ந்துபோய்த்துவக்கிப் பிடித்துவந்தொருநொடியினிற்றேருடன்பிணித்தான். |
(இ -ள்.) (அது கேட்டும் உத்தரன் அச்சந்தெளியாமல்), கொடி தட தனிதேரினின்று - துவசத்தையுடைய பெரிய ஒன்றாகிய [ஒப்பற்ற] தேரினின்று, உகைத்து - எழும்பி, முன் குதியா - முன்னே குதித்து, அடி தலம் பிடர் அடித்திட ஓடலும் - பாதங்கள் பின்புறத்திலே அடிக்கும்படி (அதிவேகமாக) ஓடிப்போன வளவில்,- (அருச்சுனன்), ஒரு நொடியினில் - ஒரு கணப்பொழுதிலே, அவனை - அவ்வுத்தரனை, தொடர்ந்து போய் - பின்தொடர்ந்து ஓடிச் சென்று, தொடி தட புயம் இரண்டையும் - தொடியென்னும் வளையணிந்த (அவனது) பெரிய தோள்களிரண்டையும், துவக்கி - கட்டி, பிடித்து வந்து - பிடித்துக்கொண்டு வந்து, தேருடன் பிணித்தான் - தேரோடு கட்டினான்; (எ - று.) "தேர்விடும் விசயனுக்கிவள்" (31) என்றும், "உரைத்தனள் பேடி" (40) என்றும் பேடிவடிவிற்கு ஏற்பப் பெண்பாலாற் கூறி வந்தவர், இனி ஆண்மை காட்டத் தொடங்கியதனால், ஆண்பாலாற் கூறலாயினர். உகைத்தல் - அழுத்தியெழுதல். 'அடித்தலம் பிடரடித்திட' என்றது-அவன் ஓடின ஓட்டத்தின் வேகமிகுதி கூறியவாறு: தன்மைநவிற்சியணி. (200) 42.-பிருகந்நளை தேர்செலுத்தி, முன்பு தான் வைத்த வில்லையும் அம்பையும் எடுத்துவருதல். பிணித்ததேரினைப்பெற்றமும்பிற்படக்கடாவித் திணித்தரும்பெரும்பொதும்பரிற் சேர்த்தியசிலையுந் |
|