50.-இதுவும் அடுத்தகவியும்-விதுரன் துரியோதனனை நோக்கிக் கூறுதலைத்தெரிவிக்கும். அன்றுபோலலனருச்சுனனம்பிகாபதிபால் துன்றுபோர்புரிதவத்தினாற்சுடுகணைபலபெற்று அன்றுபோரினிலவுணரையமரருக்காக வென்றுபோனகநுகர்ந்துபொற்றருமலர்வேய்ந்தான். |
மூன்று கவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) (விதுரன் துரியோதனனை நோக்கிக்கூறுவான்:-) அருச்சுனன்-, அம்பிகாபதிபால் - பார்வதிகொழுநனான பரமசிவனிடத்தில், துன்று போர் புரி - நெருங்கிய போரைச் செய்து, தவத்தினால் - (அவனை நோக்கிச்செய்த) தவத்தால், சுடு பல கணைபெற்று - (பகைவரை) அழிக்கவல்ல பல ஆயுதங்களைப் பெற்று, அன்று - அப்பொழுதே, அமரருக்கு ஆக-(இந்திரன் முதலிய) தேவர்களின் பொருட்டாக, அவுணரை - (அவர்களால் வெல்லக் கூடாத நிவாதகவசர் காலகேயர் என்னும்) அசுரர்களை, போரினில் வென்று - போர்செய்து ஜயித்து, போனகம் நுகர்ந்து - (இந்திரனுடனே ஒக்கஇருந்து தேவர்கள் தந்த) உணவை யுண்டு, பொன்தரு மலர்வேய்ந்தான் - பொன்மயமான கற்பகவிருக்ஷங்களின் மலர்களை (அத்தேவர்களால்) சூட்டப்பெற்றான்; (ஆதலால்), அன்று போல் அலன் - (இப்பொழுது) முன்னிருந்தவன்போலல்லன்; (எ - று.) இச்செய்யுளினால் பேடிவடிவுடன் தனித்து நின்று பொருதது அருச்சுனனாக இருக்குமென்றும், ஒன்றியாக இருந்தும் வெல்லக்கூடியவ னென்பதற்கு வேண்டியகாரணம் இன்னதென்றும் துரியோதனனுக்கு விதுரன் எடுத்துக்காட்டினானென்க. விதுரன் கூறுவன துரியோதனனை நோக்கியாகுமென்பது மேலைச் செய்யுளில் 'இறைவ' என வந்த விளியால் வெளியாம். துரோணன் முதலியோர் பேடியை அருச்சுனன்தானோ என்று ஐயுற்றமையை நாற்பத்தேழாஞ்செய்யுளிற் காணலாம். இனி, இச்செய்யுளை விதுரனது உட்கோளைத் தெரிவிப்பதென்று கொள்ளுதலும், ஒன்று: கவிக்கூற்றென்று கொள்வாரும் உளர். பாண்டவர்கள் வனவாசஞ்சென்றபொழுது அவர்களில் அருச்சுனன் வியாசபகவானது கட்டளையின்படி, அம்முனிவனிடம் மந்திரோபதேசம் பெற்றுக் கைலாசகிரிக்குச் சென்று தவம்புரிகையில் அவனையழிக்குமாறு துரியோதனனால் ஏவப்பட்ட மூகாசுரன் பன்றி வடிவங்கொண்டு அருச்சுனன்மீது பாய்ந்து அவனைக் கொல்வதாக வந்தவளவில், சிவபெருமான் வேடவடிவங்கொண்டு அங்குவந்து அப்பன்றியின்மீது ஓர் அம்பை எய்ய, அது பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்றை யெய்து வராகத்தை விழுத்த, அதுகாரணமாக அவ்விருவர்க்கும் உண்டான போரில், பரமசிவன் எதிரியின் வில்நாணியை அறுக்க, அருச்சுனன் அவ்விற்கழுந்தாற் கடவுளின் |