பக்கம் எண் :

14பாரதம்விராட பருவம்

    (இ - ள்.) நீடிய சிலை கை - நீண்டவில்லையேந்திய கையையுடைய
தேவர்கோன் மதலை - தேவேந்திரனுடைய புதல்வனான அருச்சுனனாகிய,
ஆண்மைக்கு இமையவர் எவரின்உம் பெரியோன் - வீரத்தன்மையில்
தேவர்கள் யாவரினும் மேம்பட்டவன்,- நிருத்தம் நல் அரங்கினில் - நாட்டியம்
ஆடுதற்கு அமைந்த சிறந்த நாடகசாலையில், முன் நாள் - முற்காலத்தில்,
வாடிய மருங்குல் பணைத்த பூண்கொங்கை வாள் தடங் கண்கள் வார்
குழைமேல் ஓடிய வதனத்து உருப்பசி - துவளுகிற [மெல்லிய] இடையையும்
பருத்த ஆபரணங்களையணிந்த தனங்களையும் வாள்போன்ற விசாலமான
கண்கள் நீண்டகாதணிமே லோடப்பெற்ற முகத்தையுமுடையளாயிருந்த
உருப்பசி யென்ற தேவமாதின், பணியால் - ஏவலினால் [சாபத்தினால்], ஓர்
யாண்டு உறுவதற்கு அமைந்த - ஒருவருஷகாலம் தங்கும்படி பொருந்திய,
பேடியின் வடிவம் - பேடிவடிவத்தை, தரித்தனன் -; (எ - று.)

     ஆண்மைக்கு எவரினும் பெரியோன்பேடியாயினான்: இது என்ன
வியப்பு! எனஅதிசயந்தோன்றக் கூறியவாறு.  அருச்சுனன் சிவபிரானை
நோக்கித்தவம்புரிந்து பாசுபதம் பெற்றுப் பகைவென்ற பின், தேவேந்திரன்
அவ்வருச்சுனனைத் தன்னுலகத்திற்கு இட்டுக் கொண்டுபோய்ப் பெருஞ்சிறப்புச்
செய்து தனிவிடுதி யளித்திருந்தானாக, உருப்பசி நடித்த புதுநாடகத்தைக் கண்டு
அவ்வருச்சுனன் புகழ்ந்து தன்விடுதியிலிருக்கையில், சூரியாஸ்தமனமாகி
நிலாத்தோன்றிய போது தனிப்பட்ட அவ்விடுதிக்கு உருப்பசி வந்தாள்:
அவளைக் கண்ட அருச்சுனன், 'நீ ஆயுவின் பாரியையாயிருந்தவளாதாலால்,
எனக்கு மாதாவின் வருக்கத்தைச் சேர்ந்தவ ளன்றோ" என்று அவளைப்
பணிந்தான்:  உடனே அவள் வெகுண்டு "இரவிடை யாடவர் புகலா மொழி
புகன்றாய்: நீ பேடிய ரியல் பாகுக" என்றுகூறித் தன் கோயிலிற் புகுந்தாள்:
மறுநாள் பொழுது விடிந்ததும், செய்தியுணர்ந்த தேவேந்திரன் தேவர் புடைசூழ
அவளிருக்குமிடம் சேர, அவளும் தேவேந்திரனைப் பதம்பணிந்தாளாக,
தேவர்கள் "இந்தப் பேடிஉருவம் இந்த அருச்சுனனுக்கு வேண்டும்போது
ஒருவருடம் வந்திருக்குமாறு அருள்புரிக" என்று அவளிடத்து வேண்ட,
அங்ஙனமே அன்னாள் வரந்தந்தன ளென்பது, அருச்சுனன்
றவநிலைச்சருக்கத்துக் கூறிய சரிதை யாகும்.                     (17)

18.-பேடிவடிவம்படைத்த அருச்சுனன் விராடராஜசபை சென்று
அருச்சுனன் கோயிலிலிருந்த பேடி யென்று தன்னைத்  தெரிவித்தல்.

வாயுவின்மதலைசென்றுகண்டதற்பின் மற்றைநாளொற்றைவெண்
                                         கவிகைச்,  
சேயொளிமகுடச்சென்னியானிருந்த பேரவைசிறப்புறச் சென்று,
தூயவெண்புரிநூன்முனிதிருக்கழலி லொருபுடைதோய்தரத்
                                     தலைசாய்த்து,
ஏயவெஞ்சிலைக்கையருச்சுனன்கோயிலிருப்பதோர் பேடி
                                     நானென்றான்.

      (இ -ள்.) வாயுவின் மதலை - வாயுபுத்திரனான வீமசேனன், சென்று -
போய், கண்டதன் பின் - (விராடனைப்) பார்த்து (அங்கு)