பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 143

பெயர்விகுதி.  கேஸரியென்னும் வாநரராஜனது மனைவியான அஞ்சநா
தேவியினிடத்தில் வாயுபகவானது அநுக்கிரகத்தால் தோன்றியவன் இவன்;
இவனிடத்து ருத்திராமிசமும் உண்டு.                            (217)

59.-உத்தரன் ஸாரதியும், அருச்சுனன்இரதிகனுமாகப்
போர்க்கு நிற்றல்.

உரிய தேரினைமீதுகொண்டுத்தரன்செலுத்தக்
கரியமேனியன்செய்யதாமரைத்தடங்கண்ணன்
புரியவாங்கியசிலையினனின்றனன்பொலம்பொற்
கிரியின்மீதெழுமரகதகிரியெனக்கிளர்ந்தே.

      (இ -ள்.) கரிய மேனியன்-கறுத்த உடம்பின்நிறத்தையுடையவனும்,
செய்ய தாமரை தட கண்ணன் - செந்தாமரைமலர்போன்ற பெரிய
கண்களையுடையவனுமாகிய அருச்சுனன்,-உரிய தேரினை மீதுகொண்டு -
தனக்குரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு,-உத்தரன் செலுத்த - (அத்தேரை)
உத்தரன் நடத்தாநிற்க,- பொலம்பொன் கிரியின்மீது எழும் - அழகிய
பொன்மயமானதொரு மலையின்மேல் விளங்குகின்ற, மரகதம் கிரி என -
பச்சையிரத்தின மயமானதொரு மலைபோல, கிளர்ந்து - விளங்கி,-புரிய
வாங்கிய சிலையினன்-நன்றாக வளைத்து நாணேற்றிய வில்லையுடையவனாய்,
நின்றனன் - (கம்பீரமாக) நின்றான்; (எ - று.)

     பசுநிரையை மீட்டபின்பும், பகைவர் பொரவர, அருச்சுனன்
அவர்களுடன் போர்புரிவதற்குச் சலியாது சித்தனாய் அம்புதொடுத்தெய்யும்
நிலைமையில் நின்றா னென்க.  பொன்மயமான தேர்க்குப் பொன்மலையும்,
அதன் மேலுள்ள கருநிறமுடைய அருச்சுனனுக்கு மரகதமலையும்-உவமை.
மலர்ச்சியும் குளிர்ச்சியும் சிவப்பும் கண்டோரைமகிழ்வித்தலும் அழகும்பற்றி,
கண்களுக்குச் செந்தாமரை மலர் உவமை.  புரிய - போர்புரிய வென்றுமாம்.
மரகதம் - மரதகம்; எழுத்து நிலைமாறுதல்:  இலக்கணப்போலி.
இரண்டாமடியில் 'கரிய' 'செய்ய' என மாறுபட்ட சொற்கள் வந்தது -
தொடைமுரண்.  மரகதகிரி - வடமொழித்தொடர் ஆதலின், வலிஇயல்பு. (218)

60.-அருச்சுனன் பேடிவடிவொழிந்து
நிஜரூபத்தோடு வெளிப்படுதல்.

படுங்குறும்பனிபுதைத்தலிற்பரிதிதன்னுருவம்
ஒடுங்குமாறெனவொளித்ததன்பேட்டுருவொழித்து
நெடுங்கொடுங்கணைநிருபன்வெஞ்சேனையின்வேந்தர்
நடுங்குமாறுமுன்றோன்றினனரனெனுநாமன்.

     (இ - ள்.) நரன் எனும் நாமன் - நரனென்ற பெயரையுடையவனான
அருச்சுனன்,-படும் குறும் பனி-(விரைவில்) அழியும் அற்பமாகிய பனி,
புதைத்தலின்-மூடுதலினாலே, பரிதிதன் உருவம் - சூரியனது மண்டலம்,
ஒடுங்கும் ஆறு என - மறையும்விதம்போல, ஒளித்த - (தான்)
உருமறைந்திருப்பதற்குக் காரணமான, தன் பேடு