பக்கம் எண் :

144பாரதம்விராட பருவம்

உரு - தனதுநபும்ஸகரூபத்தை, ஒழித்து-நீக்கி,-நெடுங் கொடுங்கணை நிருபன்
- நீண்ட கொடிய அம்புகளையுடைய துரியோதனராசனது, வெம் சேனையின் -
கொடிய சேனையிலுள்ள, வேந்தர் - அரசர்கள், நடுங்கும் ஆறு - அஞ்சி
நடுங்கும்படி, முன் தோன்றினன் - (அவ்வரசர்களுக்கு) எதிரில் வந்து
நின்றான்; (எ - று.)

     அஜ்ஞாதவாசத்திற் கழிக்கவேண்டிய காலம் கழிந்துவிட்டதனால்,
அருச்சுனன் நிஜரூபத்தோடு அவ்வரசர்கள்முன்னிலையில் வந்துநின்றன
னென்க.  படும் - (தனக்குரியபருவத்தில்) உண்டாகின்ற என்றலுமாம்.
சூரியமண்டலம் - அருச்சுனனுக்கும், குறும்பனி - பேட்டுருவிற்கும் உவமை.
கணைக்குக்கொடுமை-கூரியதாய்ப் பகைவர்களைக் கொல்லுந்திறம்.  நிருபன் -
மனிதரைக் காப்பவனென்று பொருள்படும் வடசொல்.  'பேடு' என்ற சொல் -
ஆணவாய்ப் பெண்ணிழந்த அலியும் பெண்ணவா யாணிழந்த பேடியுமாகிய
நபும்ஸகவகை யிரண்டுக்கும் பொதுவாமென்று உணர்க.  பேடு + உரு =
பேட்டுரு.

    முன்னொருகாலத்திலே குருசிஷ்யக்கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்குதற்பொருட்டு நரனென்றசிஷ்யனும் நாராயணனென்ற குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் தோன்றிச் சீடனுக்குக் குரு தத்துவப்பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்ற திருமாலின் இருமூர்த்திகள்தாமே இங்கு
முறையே அருச்சுனனும் கண்ணனுமாக அவதரித்ததனால், அருச்சுனனுக்கு
நரனென்று ஒருபெயராயிற்று.                                   (219)

61.-அருச்சுனனதுதுவசத்தில் அனுமன் கூத்தாடுதல்.

செருச்செய்வான்வருசேனைவெண்டிரையையுங்கடப்பான்;
பருச்சிலம்பினின்றுகைதருபாவனைபோல
உருச்செழுஞ்சுடரெறிப்பநின்றுலாவினனுண்மைக்கு
அருச்சுனன்றடந்தேர்க்கொடியாடையிலனுமன்.

      (இ -ள்.) அனுமன் - அநுமான்,- அருச்சுனன் தட தேர் கொடி
ஆடையில்-அருச்சுனனுடைய பெரிய தேரினது கொடிச்சீலையில், உண்மைக்கு
நின்று - பிரதியட்சமாகப் பொருந்தி,-(முன்பு மகேந்திர மலையின்மேலேறி
இலங்கைக்குச் செல்லக் கடலைத் தாண்டியமைபோலவே), செரு செய்வான்
வரு சேனை வெள் திரையைஉம் - போர் செய்தற்கு எதிர்த்துவருகின்ற
பகைவர்சேனையாகிய வெண்ணிறமான அலைகளையுடைய கடலையும்,
கடப்பான் - தாண்டுதற்பொருட்டு, பரு சிலம்பின் நின்று - பருத்ததொரு
மலைமேல்நின்றும், உகைதரு - உதைந்து எழுகின்ற, பாவனைபோல -
தோற்றம்போல,- உரு செழுஞ்சுடர் எறிப்ப - (தனது) உருவம் மிக்கஒளியை
வீசும்படி, உலாவினன்-உலாவி விளங்கினான்; (எ - று.)

     கடலுவமையால் சேனையின்பரப்பும், மலையுவமையால் தேரின்
பெருமைவலிமைகளும் விளங்கின.  தேர்க்கொடிச்சீலை காற்றில்
அசைகின்றபோது அதிலுள்ள வாநரவடிவத்தில் ஆவேசித்துநின்ற