பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 147

64.-மீண்டும்அருச்சுனன்உத்தரனைத்தேற்றித் துரியோதனன்மீது
தேர்செலுத்தச்சொல்லுதல்.

தாழ்ந்தவாடையினுயர்கொடித்தண்டுடைத்தேர்மேல்
வீழ்ந்தபாகனைமீளவும்விரகுறத்தேற்றிச்
சூழ்ந்ததன்பெருந்துணைவனைச்சூதினாற்றுரந்து
வாழ்ந்தமன்னன்மேலேவினான்வரிசிலைவல்லான்.

      (இ -ள்.) தாழ்ந்த ஆடையின் - தொங்கிய சீலையையுடைய, உயர்
கொடி தண்டு உடை - உயர்ந்த [மேலான] துவசதண்டத்தையுடைய, தேர்மேல்
- தேரில், வீழ்ந்த - மூர்ச்சித்துவிழுந்த, பாகனை - சாரதியான உத்தர
குமாரனை, வரி சிலை வல்லான் - கட்டமைந்த வில்லின் தொழிலில்
வல்லவனாகிய அருச்சுனன், மீளஉம் - மறுபடியும், விரகுஉற - பக்குவமாக,
தேற்றி - மயக்கந்தெளியச்செய்து,- சூழ்ந்த - (தான்) வஞ்சனையான
ஆலோசனைசெய்து வரவழைத்த, தன் பெருந்துணைவனை - தனது பெரிய
தமையனாகிய தருமபுத்திரனை, சூதினால் துரந்து - சூதாட்டத்தினால் (ஜயித்து
இராச்சியத்தினின்று) துரத்திவிட்டு, வாழ்ந்த - (அவனது) செல்வவாழ்க்கையைத்
(தான்) அடைந்த, மன்னன்மேல் - துரியோதனராசன்மேலே, ஏவினான் -
(தேரைச் செலுத்தும்படி உத்தரனை) ஏவினான்; (எ - று.)

     "தாழ்ந்தவாடையினுயர் கொடித்தண்டு" - தாழ்வு, உயர்வு -
தொடைமுரண்.  கொடித்தண்டு - கொடிகட்டுகின்ற மரக்கொம்பு.  'மீளவும்'
என்றது - கீழ் நாற்பதாங் கவியில் "வெயர்த்த மேனியை நறும்பனி நீரினால்
விளக்கி" என்றதனை நோக்கிற்று.  விரகு - உபாயங்களினால், உற தேற்றி -
நன்றாகத் தெளிவித்து என்றலுமாம்.  விரகு உற - அறிவுண்டாக' என்றுமாம்.
சூழ்ந்த - தம்பியர் நால்வராற் சூழப்பட்ட என்றும், கொடியவிதியினாற்
சூழப்பட்ட என்றுங் கொள்ளலாம்.  பெருந்துணைவன் - யாவர்க்கும்
மூத்தவன்.  'சூதினால் துரந்து வாழ்ந்த மன்னன்' என்பது, போரினால் வென்று
வாழவலிமையில்லாதவனெனக் குறிப்பித்தற்கு.                      (223)

65.-அங்ஙனமே உத்தரகுமாரன்நன்கு தேர்செலுத்தல்.

மச்சநாடன்மாமதலையம்மன்னவன்மொழியால்
அச்சமற்றிருந்துளவுகோலருணனிற்கொள்ள
உச்சவானிடைப்பகலவனூர்ந்ததேர்பூண்ட
பச்சைவாசியினோடினசுவேதவெம்பரிமா.

      (இ -ள்.) (அவ்வாறே), மச்சநாடன் மா மதலை - மச்சதேசத்தரசனாகிய
விராடனது சிறந்தகுமாரனான உத்தரனும், அ மன்னவன் மொழியால் - அந்த
அருச்சுனனது வார்த்தையால், அச்சம் அற்று இருந்து - பயமில்லாதவனாகி
[தேறி] (எழுந்து தேரின் முன்னிலையில்) இருந்து, அருணனின் -
(சூரியசாரதியாகிய) அருணன்போல, உளவுகோல் கொள்ள - குதிரை
தூண்டுங்கோலைக் (கையிற்)கொண்டு சாரத்தியஞ் செய்ய, சுவேதம் வெம்
பரிமா - வெண்ணிறமான வேக