முள்ள(அருச்சுனன் தேரிற் பூட்டிய) நான்கு குதிரைகளும், - உச்சம் வானிடை - உயர்ந்த ஆகாயமார்க்கத்தில், பகலவன் ஊர்ந்த - சூரியன் ஏறிச்செல்கின்ற, தேர் - தேரில், பூண்ட - பூட்டப்பட்டுள்ள, பச்சை வாசியின் - பசுமை நிறமுடைய குதிரைபோல, ஓடின-; அருச்சுனனைப் பகையிருளொழிக்கும் ஆதித்த னென்பார், அவனது தேர்க்குச் சூரியன்தேரையும், குதிரைகட்குச் சூரியன் குதிரையையும், பாகனுக்குச் சூரியசாரதியையும் உவமைகூறினார்; இத்தன்மையை முன்னும் பின்னுங் காணலாம். உவமையணி. 'பச்சைவாசியினோடின சுவேதவெம் பரிமா'-முரண்தொடை. ராஜகுலத்தவனாதலால், அருச்சுனனை 'மன்னவன்' என்றது. உளவுகோல் - குதிரைகளை யடித்தோட்டுஞ் சவுக்கு. பகலவன் - தனது சேர்க்கையாற் பகலைச்செய்பவன். இந்த நான்கு வெள்ளைக் குதிரைகள், காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு அளிக்கப்பட்டவை; இவற்றை யுடைமையால், அருச்சுனனுக்குச் சுவேதவாகனனென்றுஒரு பெயர். குதிரைக்கு வெம்மை - மிக்க விரைவு. பரி மா - பரியாகிய மா [விலங்கு] என இருபெயரொட்டு. (224) 66.-துரியோதனனதுதேர்க்கொடியை அருச்சுனனது தேர்க்கொடி சென்று நெருங்குதல். உரவினால்வடமேருவைக்கொடுமுடியொடித்து விரவியென்பெருந்தாதைநின்றாதையைவென்றான் பரிவினின்னையான்வெல்லனென் றவனிபன்பதாகை அரவைமற்றிவன்பதாகையிலனுமன்வந்தடுத்தான். |
(இ -ள்.) 'என் பெருந் தாதை - எனது பெருமைபொருந்திய தந்தையானவாயுபகவான், விரவி - பகைமைகொண்டு, உரவினால் - (தன்) வலிமையால்,வடமேருவை - வடக்கிலுள்ள மகாமேருமலையை, கொடுமுடி ஒடித்து -மூன்றுசிகரங்களை முறித்துத் தள்ளி, நின் தாதையை - உனது தந்தையானஆதிசேஷனை, வென்றான் - (முன்பு) ஜயித்தான்; (அவ்வாறே), யான் -யானும், நின்னை - உன்னை, பரிவின் - துன்பப்படும்படி, வெல்வன் - ஜயிப்பேன்,' என்று - என்றுகருதி, அவனிபன் பதாகை அரவை - துரியோதனராசனது கொடியிலுள்ள பாம்பை, இவன் பதாகையில் அனுமன் - அருச்சுனனது கொடியிலுள்ள அனுமான், வந்து அடுத்தான் - வந்து நெருங்கினான்; (எ - று.) - மற்று - அசை. அருச்சுனன் தேர்க்கொடியிலுள்ள அனுமன், துரியோதனனது தேர்க்கொடியிலெழுதப்பட்டுள்ள பாம்பை நோக்கி 'என் தந்தை உன் தலைவனை முன்னமே வென்றுள்ளான்: அவ்வாறே இப்பொழுது யான்உன்னை வெல்வேன்' என்று கறுக்கொண்டு வீரவாதங்கூறிப் போர்க்கு நெருங்குகின்றவாறு போல நெருங்கின னென்றார்; தற்குறிப்பேற்றவணி. அருச்சுனன் தேர் துரியோதனனதுதேரை வந்து நெருங்கும்பொழுது அவ்வனுமக்கொடி இவன் அரவக்கொடியை |