இன்றைக்கு யான் உயிரோடுவிட நீங்கள் உய்ந்து ஓடிப்போவீரானாலும் நாளைக்கு வீமன்கதைக்குத் தப்பிப்போகமுடியா தென்பதாம். 'நாளை' என்றது, விரைவி லென்றமாத்திரமாய் நின்றது. நாங்கள் இந்திரப்பிரஸ்தநகரத்தில் வசித்திருந்தவரையிலும் நீங்கள் பெருஞ்சிறப்படைந்திலீரென்பான், 'எங்களைக்கானில் விட்டு இரவியேகவெண்டிங்களைப்போல் நெடுந்திகிரியோச்சினீர்' என்றான்; சூரியன்முன்னே சந்திரனொளி விளங்காதவாறுபோல வெளிப்பட்டு வந்த எங்கள் முன்னே இனி உங்களரசு செல்லா தென்பதும் இதில் விளங்கும். ஆஜ்ஞையைச் சக்கரமென்றும் குடையென்றும் கோலென்றும் கூறுதல், மரபு. சங்குகள் தங்குதல், நீர்வளமிகுதியால். அளை - குழைசேறு; வளையுமாம். இங்கு, வீமனை 'வளநாடன்' என்றது - பகைவரை வெல்பவர்க்கு அவர் நாடு உரியதாகின்ற இயல்புபற்றி. களப்பலியூட்டும் - துணித்துப் போர்க்களத் தெய்வத்துக்கும் பேய்களுக்கும் உணவாக இடுவன். (232) 74. | இரவலரிளையவ ரேத்துநாவலர் விரவியதூதுவர்விருத்தர்வேதியர் அரிவையர்வெஞ்சமரஞ்சுவோர்பெருங் குரவரென்றிவர்களைக்கோறல்பாவமே. |
(இ -ள்.) இரவலர் - யாசகர்களும், இளையவர் - இளம் பி்ளைகளும், ஏத்தும் நாவலர் - (அரசரைப்) புகழ்கின்ற துதிபாடகர்களும், விரவிய தூதுவர் - (வேற்றரசரிடமிருந்து) தம்மிடத்துவந்த தூதர்களும், விருத்தர் - முதியவர்களும், வேதியர் - பிராமணர்களும், அரிவையர் - மகளிரும், வெம் சமர் அஞ்சுவோர் - கொடிய போரில் அஞ்சியோடுபவர்களும், பெருங்குரவர் - பெரிய ஐங்குரவர்களும், என்ற இவர்களை -, கோறல் - கொல்லுதல், பாவம் - தீவினையாம்; (எ - று.)- இதனால், கொல்லத் தகாதவர் இன்னார் என்பதை அருச்சுனன் கூறுகின்றான். 'போரில் முன்னிற்கமாட்டாமல் அஞ்சியோடுகின்றவர்களைக் கொல்லுதல் பாவமாதல்பற்றியும் உன்னை நான் கொல்லேன்' என்றவாறாம்; இது, குறிப்பெச்சம்: தருமயுத்தஞ்செய்வேனேயன்றி அதருமயுத்தஞ்செய்யே னென்றான். பொதுப்பொருள் மாத்திரமே கூறி அதனாற் சிறப்புப் பொருள் பெறவைத்தது-பிறிதுமொழிதலணி. இந்தச்சந்தர்ப்பத்தில் போரில் கொல்லத்தகாதவர் இரவலர்முதலியோர் என்று அவர்களையெல்லாம் ஒப்புமைக்கூட்டவணியால்உடன் கூறினார். யாசகர்தம்வயிறு பிழைத்தற்காக இரத்தலன்றி யாதொரு தீங்குஞ் செய்யாமையாலும், இளைவர் எதிர்த்தற்கு ஏற்ற அறிவும் ஆற்றலும் இலராதலாலும், நாவலர் துதிமொழி கூறுபவராதலாலும், தூதர் தமது தலைவர்பணியைச் செய்பவராதலாலும், விருத்தர் எதிர்த்தற்கு ஏற்ற திறலிலரும் நன்குமதித்து உபசரிக்கத்தக்க பெருமையுடையரு மாதலாலும், சமரஞ்சுவோர்மேற்படைசெலுத்துவது அதருமயுத்த மாதலாலும், ஐம்பெருங்குரவர் அரச னுவாத்தியான் தாய் தந்தை தம்முன், நிகரில் குரவ ரிவரி |