பக்கம் எண் :

16பாரதம்விராட பருவம்

அத்தகவுடையாண்மகிழ்வுறக்கலனுமாடையும்வேண்டுவவழங்கி
உத்தரைதனக்குப்பாங்கிநீயென்றாங்குரியதன்மகளுழைவிடுத்தான்.

     (இ-ள்.) வித்தகன் என - வல்லவனென்று, எ கலைகள்உம் பயின்ற-
எந்தக்கலைகளிலும் கற்றுவல்லவனான, விராடனும்-, பேடி தன் மொழிகேட்டு -
அந்தப் பேடியின் பேச்சைக்கேட்டு, 'இ திறம் உடையார்-(நடன நூலில்)
இவ்வளவு வல்லமைபெற்றவர், வேலை சூழ் உலகின் - கடலினாற் சூழப்பட்ட
இந்தப் பூலோகத்தில், இல்லை-,' என்று-, இனிது-இனிமையாக, உரைத்தருளி -
சொல்லி,- அ தகவு உடையாள் - அப்படிப்பட்ட திறமுடையளான
அந்தப்பேடி, மகிழ்வுஉற - மகிழ்ச்சியடையும்படி, வேண்டுவ - (அவள்)
விரும்பக்கூடிய, கலன்உம் - ஆபரணங்களையும், ஆடைஉம் -
வஸ்திரங்களையும், வழங்கி - கொடுத்து, 'உத்தரை தனக்கு - உத்தரை
யென்கிற (என்) மகளுக்கு, நீ -, பாங்கி-உயிர்த்தோழியாவாய்', என்று - என்று
சொல்லி, உரிய தன் மகளுழை - (தனக்கு) உரியமகளான அவளிடத்தில்,
ஆங்கு - அப்போது, விடுத்தான் - (அந்தப்பிருகந்நளையை) அனுப்பினான்;
                                                        (எ- று.)

     உரியதன்மகள் என்றது - தான் பெற்ற பெண்என்றபடி. இத்திறமுடையார்வேலைசூழுலகி னில்லை யென்றதனால், அன்னாளை
மன்னவன்பரீட்சித்தறிந்தமை பெறப்படும்.                        (20)

21.-சின்னாள் கழித்து நகுலன் புரவியோட்டுவோ னுருக்கொண்டு
விராடன் குதிரையேறும் முன்றிலிற் சென்றிருத்தல்

பின்னருஞ்சின்னாளகன்றபினகுலன்பேரழகினுக்குவேளனையான்
மின்னுடைவடிவேல்வேந்தர்கோன்விராடன்வெம்பரியேறுமுன்றிலின்
மன்னியதொழில்கூர்கம்பியுங்கயிறுமத்திகையுடன்கரத்தேந்தி[வாய்
உன்னயமுதலாம்புரவிநூலறிவோனுளநிகழ்தருக்கொடுசென்றான.

     (இ - ள்.) பின்னர்உம் - பின்னும்,சில் நாள் அகன்றபின் - சிலநாள்
கழிந்தபிறகு, பேர் அழகினுக்கு-மிக்க அழகிலே, வேள் அனையான் -
மன்மதனையொத்தவனும், உன்னயம் முதல்ஆம் புரவிநூல் அறிவோன்-
உன்னயம் முதலிய குதிரையைப்பற்றிய நூல்களை யறிந்தவனுமாகிய, நகுலன் -,
மின் உடை - ஒளியையுடைய, வடி வேல் - காய்ச்சியடிக்கப்பட்ட
வேலாயுதத்தையுடையனான, வேந்தர் கோன்விராடன் - அரசர்க்கரசனான
விராடன், வெம் பரி ஏறும் - விரும்பத்தக்க குதிரையிலேறுகின்ற,
முன்றிலின்வாய்-முற்றத்திலே, மன்னிய தொழில் கூர் - (தான் இப்போது)
மேற்கொண்ட குதிரையோட்டுந்தொழிற்கு ஏற்ற, கம்பிஉம் - கடிவாளமும்,
கயிறும் -, மத்திகையுடன் - குதிரைச்சம்மட்டியுடனே, கரத்து - கையிலே,
ஏந்தி -, உளம் நிகழ் தருக்கொடு - மனத்திற்பொருந்திய மேம்பாட்டுடனே,
சென்றான்-; (எ - று.)