பக்கம் எண் :

162பாரதம்விராட பருவம்

னாலும்வெகுண்டு கூறினாலும் அந்தந்தப் பயன்களைத் தந்தேவிடுகின்ற
நிறைமொழிகளையுடைமையாற்) பழுதுபடுதல் [தவறிப்போதல்] இல்லாத
நாவுடையானென்றுமாம்.

     'முழுதுணர்' என்னும் அடைமொழியை முந்தைக்குங் கூட்டலாம்;
அவரும் திரிகாலஞானியாதலால். பழமையுணர்த்துகின்ற 'முந்தை' என்ற
பண்புப்பெயர், இங்குப் பாட்டனுக்கு ஆகுபெயராம்.  முன் தந்தை யென்பது
முந்தையென மருவிய தென்பர் ஒருசாரார்:  தந்தைக்கு முற்பட்டவனென்பது
கருத்து:  பீஷ்மன் அருச்சுனனுக்குப் பெரியபாட்டனாவன்.  பற்குனன் -
பல்குந னென்ற வடசொல்லின் விகாரம்: பங்குனி மாதத்தில் உத்தரபல்குநி
[உத்தரம்] என்னும் நக்ஷத்திரத்திற் பிறந்ததனால், பல்குனனென்று
அருச்சுனனுக்குப் பெயர்:  இப்பெயர் தமிழிற் சிறுபான்மை பங்குனனெனத்
திரிந்தும் வழங்கும்.  தொழுது தொடையேவுதல் - இரண்டு பாதங்களிலும்
இரண்டு அம்புகளைச் செலுத்துவது.  'தொழா நின்று' என்னும்
நிகழ்காலவினையெச்சம், இங்கு 'தொழுது' எனத்திரிந்து நின்றது;
அம்புகளையேவி அதனால் தன்வணக்கத்தை யுணர்த்தின னென்பது கருத்து.
இருவரும் பெருமுதுகுரவ ராதலால், அவர்களைத் தொழுது தொடையேவினான்.
                                                          (244)

86.-துரோணர் அருச்சுனனையெதிர்த்தல்.

தாளிணை யிறைஞ்சியதனஞ்ச யன்றொடும்
வாளிகண் டுளமிகமகிழ்ச்சி கூரவும்
மீளிமை யுடையவவ்வீரன் மீதெழும்
தூளிசெய் தேரினைத்துரோண னுந்தினான்.

      (இ -ள்.) (அப்பொழுது), துரோணன்-, -தாள் இணை இறைஞ்சிய -
(தனது) உபயபாதங்களை வணங்குதற்பொருட்டு, தனஞ்சயன் தொடும் - (தனது
இரண்டுபாதங்களின்மேலும்) அருச்சுனன் தொடுத்த, வாளி -
அம்புகளிரண்டையும், கண்டு - (தான்) பார்த்தலால், உளம் மிக மகிழ்ச்சி
கூரஉம் - (தன்) மனம் மிகுதியாய் மகிழ்ச்சியடையவும்,- மீளிமை உடைய அ
வீரன்மீது - வெல்லுந்திறமையையுடைய அந்தமகாவீரனாகிய அருச்சுனன்மேல்,
எழும் தூளி செய் தேரினை - மேற்கிளம்பும் புழுதிகளை யுண்டாக்குகின்ற
(தனது) இரதத்தை, உந்தினான் - செலுத்தினான்; (எ - று.)

      கண்டுஉளம்மகிழ்தல்-தனது அந்தரங்கசிஷ்யனான அருச்சுனனது
திறமையையும் பணிவையும் நோக்கி.  இங்ஙனம் மனமகிழவும் அவனுடன்
பொருதற்குத் தேர்செலுத்தியது, துரியோதனனுக்காகச் சோற்றுக்கடன்
கழிக்கவேண்டுதலால்.                                       (245)

வேறு.

87.-அருச்சுனன்துரோணனைநோக்கிச்
சிலகூறத்தொடங்குதல்.

உந்துதேர் முனியை யந்தவுதிட்டிர னிளவ னோக்கிச்
சிந்தையி லன்பு கூரச்சேவடி பணிந்து போற்றி