பக்கம் எண் :

168பாரதம்விராட பருவம்

இங்குஒப்புநோக்கத்தக்கன.  அணியப்படுவதென்னும் காரணத்தால் எல்லா
ஆபரணங்களையுங் குறிக்கின்ற 'அணி' என்ற காரணப்பொதுப்பெயர், இங்குச்
சிறப்பாய்ப் பவித்திரமென்ற அணிகலத்தைக் குறித்தது.

      இங்கு'சிலை' என்றது - வில் முதலிய ஆயுதங்களிற் பயிலும்
வகைகளையும் பகைவெல்லுதற்குரிய மந்திராதிப் பிரயோகங்களையும்
அறிவிக்கின்ற தநுர்வேதத்தைக் குறித்தது:  இலக்கணை.  அருச்சுனன் தனது
ஆசிரியனாகிய துரோணன்மீது தன்மனத்துப் பகைமையில்லா திருக்கையில்
அக்குருவின் கட்டளைப்படியே விளையாட்டாகப் போர்செய்கின்றமை தோன்ற,
'வீரமுனிவிலாமுகன்' என்றார்.  மனக்குறிப்பறிவதற்குக் கருவி முக மாதலால்,
'வீராவேசமில்லாத முகமுடையவன்' என்றது.  'முனியும் வீரமுனிவிலா முகனும்'
என்றவிடத்து, சொல்நிலையால், முனிபவனும் முனிதலில்லாத
முகத்தையுடையவனு மென ஒருபொருள் தோன்றுதலால், தொடைமுரண்
காண்க.  இங்கு 'முகன்' என்றது - முகமென்ற அஃறிணைப்பெயரின்மேற்
பிறந்த உயர்திணையாண்பாற்பெயர்.                             (251)

93.-போர்த்திறத்தில்அருச்சுனன் சிறத்தல்.

வண்டுதான்முரலுங்கஞ்சமாலையான்பயிற்றுவித்துப்
பண்டுதான்கண்டகூற்றிற்பதின்மடங்குயர்ந்தபண்பால்
மிண்டுதானவரைவென்றவிறலுடைவிசயன்வின்மை
கண்டுதானவன்றனோடுகற்பதற்குன்னினானே.

      (இ -ள்.) வண்டு முரலும் கஞ்சம் மாலையான் - வண்டுகள் (மொய்த்து)
ரீங்காரஞ்செய்கின்ற தாமரைமலர்மாலையையுடையவனான துரோணன்,- மிண்டு
தானவரை வென்ற விறல் உடை விசயன் வின்மை - நெருங்கிய (நிவாதகவசர்
முதலிய) அசுரர்களைச் சயித்த வீரத்தன்மையையுடைய அருச்சுனனது
விற்றொழில் வல்லமை, தான் பண்டு பயிற்றுவித்து கண்ட கூற்றின்
பதின்மடங்கு உயர்ந்த பண்பால் - தான் முன்பு (அவனுக்கு
ஆசிரியனாயிருந்து) கற்பித்துக்கொடுத்துப் பரீஷித்துப் பார்த்திருந்தவளவினும்
பத்துப்பங்கு அதிகமாக மிக்கிருந்ததன்மையினால், கண்டு - அதுகண்டு, தான்
அவன்தனோடு கற்பதற்கு உன்னினான் - தான் அவ்வருச்சுனனிடத்து
(வில்வித்தை) கற்றுக்கொள்ளுமாறு கருதினான்; (எ - று.)

     துரோணன், முன்பு தான் அருச்சுனனுக்குக் கற்பித்து
வைத்திருந்ததைக்காட்டிலும் பலமடங்கு அதிகமாக அவன் இப்பொழுது
போர்செய்கின்ற திறத்தைப் பார்த்து, தான் அந்த அருச்சுனனிடத்தில்
வில்வித்தை கற்றுக்கொள்ளவேண்டு மென்று கருதினனென்க.  துரோணனிடம்
வில்வித்தை கற்றுத்தேர்ந்த அருச்சுனன் பிறகு அக்கினிபகவானிடத்துக்
காண்டீவ வில்லும் அக்ஷயதுணீரமும் பெற்றும், பின்னர் வனவாசகாலத்துப்
பரமசிவனிடத்துப் பாசுபதாஸ்திரமும் வில் அம்பறாத்தூணி முதலியனவும்
பெற்றும்,