பக்கம் எண் :

172பாரதம்விராட பருவம்

பலர்உம் -வலியழிதலில்லாத பல அரசர்களும், மோதி நேர் பொருது-நெருங்கி
எதிரில் நின்று (அருச்சுனனோடு) போர்செய்து, ஆவி மாய்ந்தார் -
உயிரழிந்தார்கள் [இறந்துபோனார்கள்]; (அப்பொழுது), பொரு படை சேனை
யாஉம் புக்க உழி - போர்செய்யும் ஆயுதங்களையேந்திய சேனைகளெல்லாம்
(போரிற்புறங்கொடுத்து) ஓடியொளித்த இடத்தை, யாவர் கண்டார் - யார்
அறிவர்? [எவரும் அறியா ரென்றபடி]; (அச்சமயத்தில்), ஒரு பரி ஒற்றை ஆழி
தேரவன் - ஒரு குதிரையையும் ஒரு சக்கரத்தையுமுடைய தேரையுடையவனான
சூரியன், உச்சம் ஆனான் - உச்சி வானத்தையடைந்தான்
[மத்தியானகாலமாயிற்று]; (எ - று.)

     'அவனைக் கண்டு கெட்டனன்' என்பதற்கு - அங்ஙனம் முதுகிட்டுப்
போன மகாவீரனான அசுவத்தாமனைப் பார்த்துத் தான் போர் செய்யாமலே
புறங்கொடுத்தன னென்று பொருள்கொள்ளுதலுமாம்.  ஓடிப்போனவர் தவிர
மற்றை யோடாதவரனைவரும் உயிரிழந்தனரென்க.  சேனைகளெல்லாம்
யாவருங்காணாதவிடத்துப்புக்கு ஒளித்துக்கொண்டன வென்பார் 'புக்குழி
யாவர்கண்டார்' என்றார்.  கேடிலாத - போரிற் புறங்கொடுத்தலில்லாத
என்றுமாம்.  'கெட்டனன் கேடிலாத' - தொடைமுரண். 'ஓதி' என்று எடுத்து,
வீரவாதங்கூறி யென்றலு மொன்று.  பலரும் ஆவி மாய்ந்தார் - ஆவி என்ற
அஃறிணைச்சொல், 'பலர்' என்னும் உயர்திணையோடு சார்த்தப்பட்டதனால்,
அவ்வெழுவாயின் பயனிலையாகிய 'மாய்ந்தார்' என்னும்
உயர்திணைவினையைக் கொண்டு முடிந்தது; திணைவழுவமைதி. மாய்தல் -
அழிதல்:  என்றும் அழிவின்றி நித்தியமாகிய உயிர்க்குமாய்தலென்றது,
உடம்பினின்று நீங்குதலையாம்.

     சூரியனது தேர்க்குதிரை 'ஏழு [= ஸப்த ]' எனப் பெயர்பெற்றதொன்றே
யென்பாரும், ஒரு குதிரையுண்டு அதற்கு ஏழுபெயர்களென்பாரும், ஏழு
குதிரைகளுண்டென்பாரும், ஏழு குதிரைகளுமுண்டு அவற்றிலொன்று 'ஏழு
[=ஸப்த]' எனப் பெயர்பெற்றதென்பாரும் உள ராதலின், அவர்களுள் முதலிற்
கூறிய இருவர் மதம்பற்றி 'ஒருபரி' எனப்பட்டது.  இனி, ஒப்பற்ற
குதிரையென்றலு மொன்று.  ஆழி - வட்டம்; தேருருளைக்குப் பண்பாகுபெயர்.
உச்சமாதல் - நடுவானத்து வருதல்.                             (256)

98.-வீடுமன் முதலியோர் அருச்சுனனை வளைதல்.

வென்னிடுமளவினின்றவீடுமன்விதுரன்வண்டு
தென்னிடுமலங்கன்மாலைச்சுயோதனன்சிந்துராயன்
துன்னிடுநிருபர்சூழச்சூழ்திசைநான்கும்வந்து
முன்னிடுதேரோன்றன்னைமுனையுறவளைந்துகொண்டார்.

     (இ - ள்.) வென் இடும் அளவில் - (இவ்வாறு பலரும்) புறங்கொடுத்
தோடுகின்ற அப்பொழுதில், நின்ற - (தூரத்தில்) நின்ற, வீடுமன் - பீஷ்மனும்,
விதுரன் - விதுரனும், வண்டு தென் இடும்