(இ -ள்.) கொடி மதில் பாகை வேந்தன் - துவசங்கள்நாட்டிய மதில்கள் சூழ்ந்த வக்கபாகையென்னும் நகரத்து அரசனும், கொங்கர் கோன் - கொங்குநாட்டிலுள்ளார்க்குத் தலைவனுமாகிய வரபதியாட்கொண்டானென்பவன், புரவி காலால் - (தனது) குதிரைகளின் கால்களால், வடதிசை அரசர் தங்கள் மா மணி மகுடம் போல - வடக்குத்திக்கிலுள்ள அரசர்களது சிறந்த இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்களை (ப் பங்கஞ்) செய்வது போல,- அடல் உடை விசயன் - வலிமையையுடைய அருச்சுனன், மீண்டும் சென்று - மறுபடியுந் தொடர்ந்துசென்று, ஒற்றை அம்பினால் - (தனது) அம்பொன்றினால், படம் அரவு உயர்த்த கோவை மகுடபங்கம் பண்ணினான் - படமெடுக்குமியல்புள்ள பாம்பின் வடிவமெழுதிய கொடியை உயர நாட்டிய துரியோதனராஜனது கிரீடத் தைக் கீழே விழும்படிதள்ளி (அவனை) அவமானப்படுத்தினான்; (எ - று.) தலைதுணித்தால் வீமன் சபதந்தவறு மென்பதுபற்றி, துரியோதனனை மகுடபங்கம் பண்ணினவளவோடு விட்டிட்டனன். அருச்சுனன் துரியோதனனது கிரீடத்தை ஓரம்பினாற் கீழே தள்ளி அவனை அவமானப்படுத்தியதற்கு, வரபதியாட்கொண்டான் போரில் தான் ஏறிச்செல்லுகின்ற குதிரையின் தூக்கிய முன்னங்கால்களை வடதிசையிலுள்ள அரசர்களது முடியிற்சூடிய கிரீடத்தின்மீது வைத்து அதனை இடறச்செய்து அவர்களை அவமானப்படுத்துதலை உவமைகூறினார். இந்நூலாசிரியர் வரபதியாட்கொண்டானை இந்நூலின் இடையிடையே புகழ்ந்துபேசுதற்குக் காரணம், நூலாசிரியர் வரலாற்றில் விளக்கப்பட்டது. ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறித்தல் [நாமைகதேஸேநாமக்ரஹணம்] என்ற நியாயத்தால், 'வக்கபாகை' என்ற ஊர்ப்பெயர் 'பாகை' எனப்பட்டது; சத்தியபாமையை 'பாமை' என்றல்போல. வரபதியாட்கொண்டான் சோழபாண்டியமன்னவர்கட்கு உதவியாகச் சென்று அவர்கட்குப் பகைவர்களாய் வடக்குத்திக்கிலிருந்த அரசர்களையெல்லாம் வென்று அச்சோழபாண்டியர்கட்கு அரசைநிலைநிறுத்தினனென்ற விவரமறிக. அரவு - அரவக்கொடிக்கு ஆகுபெயர். (263) 105.-'அஞ்ஞாதவாசகாலம் நிறைவேறாமுன் வெளிப்பட்டமையால் இவரை மீண்டும் வனவாசஞ் செல்லச்சொல்லுக' என்று துரியோதனன் கூற, வீடுமன் மறுமொழிகூறலுறல். வல்லினிலழிந்துநின்முன்மன்னவைதன்னினன்று சொல்லியகாலஞ்செல்லாமுன்னிவர்தோற்றஞ்செய்தார் புல்லியகானினின்னம்போகநீபுகறியென்று வெல்படைவேந்தன்சொல்லவீடுமன்மீண்டுஞ்சொல்வான். |
(இ -ள்.) (அப்பொழுது),- வெல் படை வேந்தன் - (பகைவரை) வெல்லுதற்குரிய ஆயுதங்களையுடைய துரியோதனராஜன்,- (வீடுமனை நோக்கி), - இவர் - இப்பாண்டவர்கள், வல்லினில் |