பக்கம் எண் :

18பாரதம்விராட பருவம்

தக்க,சுழிகள்உம் - நற்சுழிகளும், ஒளிஉம்-, பற்றிய நிறன்உம் - பொருந்திய
நிறமும், கந்தம்உம் - (உடலின் மணமும், குரல்உம் -, பல்வகை கதிகள்உம் -
பலவகைப்பட்ட நடைகளும், பிறந்த - (குதிரைகள்) தோன்றிய, சொல் தகு
நிலன் உம் - சிறப்பித்துச்சொல்லப்படுகிற தேசமும், ஆயுஉம் - ஆயுளும்
ஆகியவற்றை, உணர்வேன் - அறிந்துள்ளேன்: துயர்உறு - துன்பம் மிக்க,
பிணிகள்உம் - (குதிரைக்கு வரும்) நோய்களையும், தவிர்ப்பேன் -
போக்குவேன்.

     இதனால், நகுலன் அசுவசாஸ்திரத்தில் தனக்குஉள்ள வல்லமையை
விவரித்துச்சொல்லியவாறு காண்க.  குதிரைகள் இன்னின்னவடிவா யிருக்கும்:
குதிரைகட்கு இன்னின்ன இடத்துச் சுழி இவ்வாறு அமைந்திருந்தால் நலனாம்:
அவற்றின்ஒளி இன்னபடியிருக்கும்:  அவற்றின்நிறம் இன்னபடியிருக்கும்:
குதிரையங்கத்தினின்று இவ்வாறான மணம்வீசின் நன்றாம்:  குரல்
இன்னின்னபடியிருப்பின் நலம் முதலியனவும், மற்றும் அக்குதிரைகட்கு
வருங்கொடியநோய் வகையும் அவற்றின் பரிகாரங்களும் என்பனஎல்லாம் தான்
அறிவே னென்கின்றான்.  வெண்மை செம்மை கருமை பொன்மை என்ற
நால்வகை நிறங்களிலும், வெள்ளி, நித்திலம், மாதுளம்போது, செம்பஞ்சி,
வண்டு, கார், அழல், உரோசனை முதலியவாகப் பலவற்றினொளி யமைதலும்,
குதிரைகள் - வநாயுபாரசீகம் காம்போசம் பாஹ்லீகம் என்றாற்போன்ற பல
தேசங்களில் தோன்றுவன வாதலும் அறிக.  குதிரையின்வடிவம் முதலியன
குறித்துத் திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் கூறியிருத்தல் காணலாம்.
மற்று - அசை.                                            (23)

24.மண்டலம்வீதிகோணமேமுதலாம்வாசிகளூர்தொழில் வல்லேன், திண்டிறற்றடந்தேர்பூண்பதற்குரியசெயலுடைப்பரிகளுந்தெரிவேன்,
வண்டிமிரலங்கன்மாலையாய்பாண்டுமைந்தர்போய்வனம்புகுந்த
                                            தற்பின், 
உண்டியுமிழந்தேனுறுதியுமிழந்தேனுன்புகழ்கேட்டு வந்துற்றேன்.

      (இ -ள்.) மண்டலம் - வட்டமும், வீதி - நேரும், கோணம்ஏ -
வளைவும், முதல் ஆம் - முதலாகிய, வாசிகள் ஊர் தொழில் -
குதிரையேறிச்செலுத்துந்தொழிலில், வல்லேன்-: திண் திறல் -
மிக்கவலிமையையுடைய, தட தேர் - பெரிய தேர்களிலே, பூண்பதற்கு - கட்டிச்
செலுத்துவதற்கு, உரிய -, செயல்உடை - செய்கையைக் கொண்ட, பரிகள்உம்-
குதிரைகளையும், தெரிவேன் - ஆராய்ந்தறிய வல்லேன்: வண்டு இமிர்
அலங்கல் மாலையாய் - வண்டுகளொலிக்கின்ற அசையுந்தன்மையுள்ள
வெற்றிமாலை பூண்டுள்ள அரசனே! பாண்டு மைந்தர் - பாண்டவர், போய் -
(நகரத்தை) விட்டுச்சென்று, வனம் புகுந்ததன் பின் - காட்டைச் சேர்ந்த பிறகு,
[பாண்டவர் வனவாசத்திற் சென்றபின் என்றபடி], உண்டிஉம் இழந்தேன் -
உண்ணும் உணவையும் இழந்தேன்: உறுதிஉம் இழந்தேன் - மனவுறுதியையும்
இழந்திட்டேன்: உன் புகழ் கேட்டு-, வந்து உற்றேன் - (இங்கே) வந்து
சேர்ந்தேன்; (எ - று.)