என்றார்,மிக்க பாதுகாவலை யுடையதென்றற்கு, 'மாபெருஞ்சேனை' என்றது, சேனை உருவத்திற் பெரிதாயிருந்தும் வலிமையிற் சிறப்புறாது சிறுமைப்பட்ட தென்ற இகழ்ச்சிகுறித்தற்குப்போலும். வரவர என்ற அடுக்கு - காலக்கிரமத்திலென்றபடி. (266) 108.-அருச்சுனன் ஆயுதங்களை வைத்திட்டுப் பேடிவேடங்கொள்ளுதல். வேந்தனைமுதுகுகண்டவெந்திறல்வீரன்மீண்டு போந்துமுன்னெடுத்தவன்னிப்பொதும்பரின்புறத்துவந்து வாய்ந்தவாயுதங்கள்யாவும்வைத்தெழில்வடிவமாற்றி ஆந்தகவெண்ணிப்பேடியாயினானென்பமாதோ. |
(இ -ள்.) வேந்தனை முதுகுகண்ட - துரியோதனராஜனைப் புறங்கொடுத்தோடச்செய்த, வெம் திறல் வீரன் - கொடிய வல்லமையையுடைய வீரனாகியஅருச்சுனன், முன் போந்து எடுத்த வன்னிபுறத்து மீண்டு வந்து - முன்புசென்று தான் ஆயுதங்களையெடுத்துக்கொண்ட வன்னிமரத்தி னருகில் மறுபடியும்வந்து, வாய்ந்த ஆயுதங்கள் யாஉம் பொதும்பரின் வைத்து-(தனக்கு) ஏற்றவையாயமைந்த (வில்முதலிய) ஆயுதங்களையெல்லாம் (கட்டி) அம்மரப்பொந்திலே மறைத்துவைத்து விட்டு, எழில் வடிவம் மாற்றி - அழகிய தனதுமெய்யுருவத்தை யொழித்து, ஆம் தகவு எண்ணிபேடி ஆயினான் - இனிமேல் ஆகவேண்டிய காரியத்தை ஆலோசித்து முன்போலப் பேடி வேடங்கொண்டான்; (எ - று.) - மாதோ - ஈற்றசை. 'ஆந்தகவெண்ணி' என்றது, பின்னர்த் தருமன் முதலியோருடனே தானும்ஒருங்குவெளிப்படவேண்டு மென்றுகருதி யென்றவாறு; ஆந்தகவெண்ணுதல் -இப்போரை உத்தரன்வென்றதாகத் தோன்றுவிக்குங் கருத்துமாம். என்ப -அசை; இனி, என்ப - என்றுசொல்வார் என்று பலர்பால்முற்றாகக் கொண்டால்,இதற்கு எழுவாய் முதனூலாசிரியராதல் வேண்டும். (267) 109.-அருச்சுனனும் உத்தரனும் விராடனகர்க்கு மீளுதல். இவ்வெயிலெறிக்கும்பைம்பொனிலங்குதேர்மீண்டுமேகக் கைவெயிலெறிக்கும்பைம்பூட்காளைதன்றேரிலேறி வெவ்வெயிலாறும்வண்ணம்விரைந்துபோய்விராடன்மூதூர் அவ்வெயில்சூழ்ந்தகாவினமர்ந்தனனரசரேறே. |
(இ -ள்.) அரசர் ஏறு - அரசர்கட்கு ஆண்சிங்கம்போன்றவனாகிய அருச்சுனன்,- வெயில் எறிக்கும் - சூரியனொளிபோன்ற ஒளியை வீசுகின்ற, பைம் பொன் - பசும்பொன்னினாலாகிய, இலங்கு - விளங்குகின்ற, இ தேர் - இந்த [அக்கினிபகவான்கொடுத்த] இரதம், மீண்டும் ஏக - திரும்பிச் சென்றுவிட,- (தான்), - கை வெயி்ல் எறிக்கும் - பக்கங்களில் ஒளியை வீசுகின்ற, பைம் பூண் - பசுமையான ஆபரணங்களை யணிந்த, காளைதன் - உத்தரகுமாரனது, |