சொல்'எனவும், இலையின் பசுமையை முதலாகிய சோலையின் மேலேற்றி, 'பசுங்கா' எனவும் கூறப்பட்டன. (269) 111.-'உத்தரன் வெற்றிபெற்று மீள்கின்றனன்' என்று விராடனுக்குச் சொல்லும்படி அருச்சுனன் தூதரையனுப்புதல். பேடிதேர்செலுத்தச்சென்றபிள்ளையும்பெரும்போர்வென்று கோடிதேர்முதுகுகண்டுகோநிரைமீட்டானென்றென்று ஓடிநீர்சொன்மினென்றுதூதரையோடவிட்டான் நீடுநீர்பரக்குங்கங்கைநாடுடைநிருபர்கோமான். |
(இ - ள்.) நீடு நீர் பரக்கும்-மிகுதியான நீர் பரவியோடப்பெற்ற, கங்கை - கங்காநதி பாய்கின்ற, நாடு - குருநாட்டை, உடை - உடைய, நிருபர்கோமான் - அரசர்க்கரசனாகிய அருச்சுனன்,-பேடி தேர் செலுத்த - 'ஆண்மையில்லாத பேடி தேரையோட்ட, சென்ற - (போர்செய்வதற்குத் தனியே) புறப்பட்டுப்போன, பிள்ளைஉம் - இளங்குமாரனான உத்தரனும், பெரும் போர் வென்று - பெரிய போரில் வெற்றிகொண்டு, கோடி தேர் முதுகு கண்டு- மிகப்பலதேர் வீரர்களை முதுகுகாட்டி யோடச்செய்து, கோ நிரை மீட்டான் - (பகைவர் கவர்ந்துசென்ற) பசுக்கூட்டத்தைத் திருப்பிக்கொண்டு வந்தான்', என்று என்று -, நீர் - நீங்கள், ஓடி சொன்மின் - ஓடிச்சென்று சொல்லுங்கள், என்று - என்றுசொல்லி, தூதரை ஓட விட்டான் - (சில) தூதர்களை (விராடனிடம்) விரைந்து செல்லும்படி அனுப்பினான்; (எ - று.) தாங்கள் விராடராஜனால் ஆதரிக்கப்பட்டமையால், அவ்வுபகாரத்துக்குப் பிரதியுபகாரமாக, இப்போரை உத்தரனே வென்றனனென்று அவனது தந்தையார் முதலியோர் கருதி மகிழும்படி செய்விக்கவெண்ணி அருச்சுனன் இங்ஙனஞ் செய்திசொல்லுமாறு விராடனைக்குறித்துத் தூதரை யேவினனென்க. மன்னவன் கவலையையொழிக்க, தூதரை யோடவிட்டனன். தேர் - தேர்வீரர்க்கு ஆகுபெயர். மகிழ்ச்சிபற்றிய அடுக்காகப் பலமுறை சொல்லுமாறு கூறின னென்பது தோன்ற, 'என்று என்று' எனப்பட்டது; ஊர்முழுவதிலும் அரசனிடத்துஞ் சொல்லும்படி யென்ற கருத்தில் வந்ததுமாம். முன்னைய நியமத்தின்படி வநவாஸ அஜ்ஞாதவாஸங்களை இடையூறின்றிக் கழித்தாயினமைபற்றியும், குருநாட்டையாளுகின்ற துரியோதனனை வென்றிட்டமைபற்றியும் இங்கு அருச்சுனனை 'கங்கை நாடுடை நிருபர் கோமான்' என்றார். (270) 112.-அன்றைக்காலையிலேயே விராடராஜன் தன்நகரத்துவந்து சேர்தல். இங்கிவனிவ்வாறுய்ப்பமுற்பகலேகியாங்கட் கங்குலிற்சேனையோடுங்கண்படையின்றிவைகிச் செங்கதிரெழுந்தபின்னர்த்தென்றிசைப்பூசல்வென்ற வெங்கழல்விராடன்றானுமீண்டுதன்னகரிபுக்கான். |
|