சிலகுதிரைகள் ஏறிச்செலுத்துதற்கு உரியனவாக, சிலகுதிரைகள் தேரிற் கட்டியோட்டுதற்கு உரியனவா மென்பது அறிக. (24) 25.-விராடன் நகுலனைச் சன்மானித்து அவனுக்குக் குதிரைகட்கு அதிபதியாகும்பதவியை யுமளித்தல். என்னவப்புரவியேற்றுநாயகன்வந்தியம்பியவின்மொழிகேட்டு, மன்னவர்க்கெல்லாமொதுங்குநீணிழலாய்வயங்குமாமதிக்குடைமன்னன், முன்னவர்க்குள்ளவரிசைகள்யாவுமும்மடங்காகவேவழங்கி, அந்நகர்த்துரங்கமவையனைத்தினுக்குமதிபதியெனும்பதங்கொடுத்தான். |
(இ -ள்.) என்ன - என்று, அ புரவி ஏறு நாயகன் வந்து இயம்பிய - அந்தச்சிறந்த குதிரைகட்குத் தலைவனானவன் வந்துசொன்ன, இன் மொழி - இனியவார்த்தையை, கேட்டு - செவியேற்று,- மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கும் நீள் நிழல் ஆய் வயங்கும் - அரசர்கட்கெல்லாம் வந்து ஒதுங்குதற்கு உரிய நீண்ட நிழலையுடையதாய் விளங்குகின்ற, மா மதி குடை - சிறந்த சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையுடைய, மன்னன் - விராடராசன்,- (வந்த அந்த நகுலனுக்கு), முன்னவர்க்கு - முன்னமே (தன்னிடத்துக்) குதிரைத்தலைவராயமர்ந்திருப்பவர்க்கு, உள்ள-, வரிசைகள் யாஉம் - சிறப்புக்களையெல்லாம், மும்மடங்கு ஆக - மூன்றுமடங்கு மிகுதியாக அமையும்படி, வழங்கி - கொடுத்து, அ நகர் துரங்கம் அவை அனைத்தினுக்குஉம் - அந்த அரண்மனையிலுள்ள குதிரைகள் எல்லாவற்றுக்கும், அதிபதி - தலைவன், எனும் - என்கின்ற, பதம் - பதவியையும், கொடுத்தான்-; துரங்கம் - வேகமாகச் செல்வதென்று பொருள்படும் வடசொல். புரவியேறுநாயகன் என்று பிரதிபேதம். (25) 26.-சகதேவன் இடையர்கோலத்தோடு, விராடனது சபையைச் சேர்தல். கிளைபடுபுரவிபுரந்திடுந்தாமக்கிரந்தியாம்பெயர்புனைநகுலற்கு இளையவனந்தகோபன்மைந்தனைப்போலிடையர்தங்கோலமதெய்தித் துளைபடுகுழையிலொருகுழையணிந்துதோளிலோர்தொடித்தடிதழுவி விளைபுகழ்விராடன்வேத்தவையதனைவேறொருநாளையினடைந்தான். |
(இ -ள்.) கிளை படு - பல பகுப்புப்பொருந்திய, புரவி - குதிரையை, புரந்திடும் - காக்குந்தொழிலைத் தெரிந்த, தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை - தாமக்கிரந்தி யென்கிற பெயர்பூண்ட, நகுலற்கு-, இளையவன்-தம்பியாகிய சகதேவன், நந்தகோபன் மைந்தனை போல் - நந்தகோபனுடைய மகனாய் வளர்ந்த ஸ்ரீக்ருஷ்ணனைப்போல், இடையர்தம் கோலம் அது எய்தி- இடைக்கோலத்தைப் பூண்டு, துளை படுகுழையில் - துளைபொருந்திய ஒரு காதிலே மாத்திரம், ஒரு குழைஅணிந்து-ஒப்பற்றகுழையென்னுங் காதணியை யணிந்து, தோளில்-, ஓர் தொடி தடி தழுவி - ஒரு வளைவான தடியைத் தாங்கிக் |