விறல்கொண்டாடி பேசுதி-பெருமை பாராட்டிப் புகழ்ந்து பேசுகின்றாய்;(எ-று.) பிரமம் - ஞானமும், வேதமுமாம்; பிரமமூர்த்தி - ஞானமே ஒருவடிவங் கொண்டாற்போன்றவ னென்க: அந்தணரை 'வேதமூர்த்தி' என்றல், வழக்கு. விவேகியாகிய நீ இங்ஙனங் கூறுதல் தகுமோ? என்பதாம். கோடியின் கோடி - கோடியாகிய கோடியெனப் பண்புத்தொகை; கோடியென்னும்எண்ணினாற் பெருக்கிய கோடியென்னும் எண் என்பது கருத்து; அது, பதுமமெனவும், கோடாகோடியெனவும், மகாகோடியெனவும்படும். தான்-தேற்றம்; ஏ - பிரிநிலை. ஒரு தனி - ஒருபொருட்பன்மொழி. (281) 123.-இதுவும் அது. புன்னவையானமாற்றம்புகன்றனரெனினுங்கேட்டாங்கு இன்னவைநன்றுநன்றென்றிதம்படமொழிவதல்லால் மன்னவையிருந்துநாளும்வழிபடுமாந்தர்மன்னர் சொன்னவைமறுத்துமாறுசொல்வரோசுருதிவல்லாய். |
(இ -ள்.) சுருதி வல்லாய் - வேதம்வல்லவனே! புல் நவை ஆன மாற்றம்புகன்றனர் எனின்உம் - மிகவும்பிழையான வார்த்தைகளை (அரசர்) சொல்லினராயினும், கேட்டு - (அவற்றைச் செவிகொடுத்துக்) கேட்டு, ஆங்கு - அப்பொழுது, இன்னவை நன்று நன்று என்று - 'இவ்வார்த்தைகள் மிகநன்றாயுள்ளன' என்று, இதம் பட - (அவ்வரசர்க்குப்) பிரியமாக, மொழிவது அல்லால் - (அரசரையடுத்து வாழ்பவர்) ஒட்டிப்பேசுவதல்லாமல், மன் அவை நாளும் இருந்து வழிபடும் மாந்தர் - ராஜசபையிலே நாள்தோறும் இருந்து (அரசர்க்குக்) கீழ்ப்படிந்துநடக்கின்ற மனிதர்கள், மன்னர் சொன்னவை மறுத்துமாறு சொல்வர்ஓ - (இவ்வாறு) அரசர்சொன்னவற்றைத் தடுத்து எதிர் பேசுவர்களோ? [பேசார் என்றபடி]; (எ - று.) எல்லாந்தெரிந்த உனக்கு அரசரைச்சார்ந்து நடக்கும் முறைமை தெரியாதோ என்றற்கு, கீழ் 'பிரமமூர்த்தி' என்றும், இங்கு 'சுருதி வல்லாய்' என்றுங் கூறினான். இங்கு, வழிபடுதல் - அரசரது குறிப்பின் வழியிற்சேர்ந்து ஒழுகுதல்; என்குறிப்பின் வழிநடப்பதற்குரிய நீ யான் சொன்னவற்றை வெட்டிப்பேசுதல் தகுதியன்றென்பதாம். "இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று, புகழினு மொக்கப் புகழ்ப-இகன்மன்னன், சீர்வழிப்பட்டதே மன்பதை மற்றென் செய்யும், நீர்வழிப்பட்ட புணை" என்ற நீதிநெறிவிளக்கம், இங்கு நோக்கத்தக்கது. புல், நவை - ஒருபொருட்பன்மொழி. 'புகன்றனரெனினும்' என்ற உம்மை - அங்ஙனம் அவர்புகலாரென்பது படநின்றது. நன்றன்றென்றுசொல்வதாயினும் பின்பு சமயம் பார்த்துத் தக்கபடிசொல்லவேண்டுமேயன்றி அப்பொழுதே மறுத்துச்சொல்லலாகா தென்பான் ஆங்கு என்றான்: இன்னவை நன்று - பன்மையில் ஒருமை வந்த வழுவமைதி: பன்மையொருமைமயக்கம், 'நன்று நன்று' என்ற அடுக்கு, உவகை பற்றியது. ஸ்ருதி என்ற |