பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 193

வடசொல்லுக்கு - (எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்கிரமத்திலே
கர்ணபரம்பரையாற்) கேட்கப்பட்டு வருவதென்றுபொருள்.            (282)

124.-மீண்டும் கங்கபட்டன்மறுத்துப்பேசுதல்.

என்னவுமிடங்கொடாமலெதிருறவிருடிமீண்டும்
கன்னன்விற்றுரோணன்மைந்தன் காங்கெயன்முதலினோரை
மன்னவவெல்லநின்சேய்வல்லனோவந்துசொன்னால்
பின்னைநீதெளிதியென்றான்பீடுடைப்பேடிதன்னை.

      (இ -ள்.) என்னஉம் - என்று (விராடன் சினந்து) சொல்லவும், - இருடி
- முனிவனாகிய கங்கபட்டன்,- இடம் கொடாமல் - (அவன் கொள்கைக்குச்)
சிறிதும் இணங்கால் [தாழாமல்],-எதிர் உற - (அவன்வார்த்தைக்கு) மாறாக,
மீண்டுஉம் - மறுபடியும்,-'மன்னவ-அரசனே! கன்னன் - கர்ணனும், வில்
துரோணன் - வில்லாசிரியனாகிய துரோணனும், மைந்தன் - அவன் மகனான
அசுவத்தாமனும், காங்கெயன் - கங்காதேவியின் குமாரனான பீஷ்மனும்,
முதலினோரை - முதலிய வீரர்களை, நின் சேய் - உனது மகன் [உத்தரன்],
வெல்ல வல்லன்ஓ - சயிக்கமாட்டுவனோ? வந்து சொன்னால் - (அக்குமரனே)
வந்து கூறினால், பின்னை - பின்பு, நீ-, பீடு உடை பேடி தன்னை -
பெருமையையுடைய அப்பேடியை, தெளிதி - (போர்வென்றவனென்று)
ஐயமறத்தெரிந்து கொள்வாய்', என்றான் - என்று சொன்னான்; (எ - று.)

     பீடுடைப் பேடிதன்னைத் தெளிதி - பேடியின் பெருமையை
யறிவாயென்றபடி.  ருஷி, காங்கேயன் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
காங்கேயன் - கங்கையின் புத்திரன்.  'காங்கெயன் முதலினோர்' என்று
பெரியோனான பீஷ்மனைத் தலைமையாக வெடுத்துக்கூறிக் குருகுலத்தவ
ரனைவரையுங் குறித்தனன்.                                    (283)

125.-விராடன் மிகக்கோபித்துக் கங்கபட்டனைக்
கவறுகொண்டு அடித்தல்.

கொடுவிலாண்மையினாலின்றென்குமரன்வென்றிடவுஞ்சற்றும்
நடவிலாதவரிற்பல்காலென்கொனீநவில்வதென்னாக்
கடுவிலாடரவிற்பொங்கிக்கவற்றினாலெறிந்துநக்கான்
வடுவிலாமுனியைமன்னன்வடுப்படுமாறுமன்னோ.

      (இ -ள்.) மன்னன் - (அதுகேட்ட) விராடராசன்,-(கங்கபட்டனை
நோக்கி), 'இன்று - இன்றைத்தினத்தில், என் குமரன் - எனது மகன், கொடு
வில் ஆண்மையினால் - கொடிய விற்போர்த்தொழிலில் தனக்கு உள்ள
திறமையினால், வென்றிடஉம் - (பகைவரைச்) சயித்திருக்கவும், நீ-, சற்றுஉம்
நடு இலாதவரின் - சிறிதும் நடுவு நிலைமை யில்லாதவர்போல
[பக்ஷபாதமுடையவர்போல], பல் கால் - பலமுறை, நவில்வது - (அதனை
இல்லையென்று மறுத்து என்மகனையிகழ்ந்து பேடியைப்புகழ்ந்து) பேசுவது,
என்கொல் - என்னோ?' என்னா - என்று சொல்லி, கடு இல் ஆடு அரவின்
பொங்கி - விஷத்