திற்குஇருப்பிடமான படமெடுத்தாடுகின்றதொரு பாம்புபோலச் சீறி, வடுஇலா முனியை - குற்றமில்லாத அம்முனிவனை, வடு படும் ஆறு - தழும்பு படும்படி, கவற்றினால் எறிந்து - சூதாடுகருவியினால் வீசியடித்து, நக்கான் - சிரித்தான்; (எ - று.)- மன் ஓ - ஈற்றசை. விராடன் சீறுதற்கு நஞ்சுள்ளபாம்பு படமெடுத்துச்சீறினாற்போலுமென உவமை கூறியவாறாம். நடுவுநிலைமையாவது - பகைவர் அயலார் நண்பர் என்னும் மூவகையாரிடத்தும் அறத்தின்வழுவாமல் ஒப்பநிற்கின்ற பக்ஷபாதமில்லாத நிலைமை. இத்தகைமையில்லாதவரியல்பு, ஒரு தலையாப்பேசுதல். கடுவில் ஆடு அரவின் - விஷத்தினாற் படமெடுத்தாடும் பாம்புபோல வென்றுமாம். கடு இல் - விஷமில்லாத என்று உரைப்பாருமுளர். சிரித்தது, வெகுளியினால். 'வடுவிலாமுனியை வடுப்படுமாறு எறிந்து' என்றவிடத்து, விரோதாலங்காரங்காண்க: வடு - குற்றமும், தழும்பும். கொடுமை - வளைவுமாம். (284) 126.-கங்கபட்டனது நெற்றியிலிரத்தம் பொசிதலை விரதசாரணி பார்த்தல். எற்றியகவறுநெற்றியெதிருறவிருந்தகங்கன் நெற்றியிற்சென்றுவாசநிறைத்தகுங்குமத்தின்சேற்றாற் பற்றியதிலகம்போலப்படுதலும்பாங்கர்நின்ற வற்றியவோடையன்னவனப்பினாள்மருண்டுகண்டாள். |
(இ -ள்.) எற்றிய கவறு - (விராடன்) வீசியெறிந்த அச்சூதாடு கருவியானது, சென்று - போய், எதிர் உற இருந்த கங்கன் நெற்றியில் - எதிரில் வீற்றிருந்த கங்கபட்டனது நெற்றியில், வாசம் நிறைந்த குங்குமத்தின் சேற்றால் பற்றிய திலகம் போல - வாசனையை மிகுதியாக வீசுகின்ற குங்குமப்பூவின் குழம்பினா லிட்ட திலகம்போல (இரத்தம் பொசியும்படி), நெற்றி படுதலும் - தாக்கிப் பட்டவளவில், - பாங்கர் நின்ற - பக்கத்தில் நின்ற, வற்றிய ஓடை அன்ன வனப்பினாள் - நீர்வறண்ட ஓடைபோன்ற [அலங்காரமில்லாத] அழகுள்ள வண்ணமகளாகிய திரௌபதி, மருண்டு கண்டாள் - (அதனை) வெருண்டு பார்த்தாள்; (எ - று.) மருண்டுகாணுதல், முனி வடிவமாயுள்ள தன்கணவனை அரசன் புண்படுத்தியதனா லாகிய கவலையால். ஆபரணமணிதல் முதலிய வற்றா லுண்டாகுஞ் செயற்கையழ கில்லாமையும், தன்கணவர் உருக்கரந்து அடிமைபூண்டிருத்தலா லாகிய வருத்தத்தாற் பொலிவிழந்திருத்தலும், அரசியுருவத்தை யொழித்துப் பணிசெய்பவள்வடிவத்தைக் கொண்டிருத்தலும் பற்றி, 'வற்றிய வோடையன்ன' என்றும், இயற்கையழகுடைமைபற்றி 'வனப்பினாள்' என்றுங் கூறினார். நெற்றி என்ற சொல் இரண்டனுள், முன்னது - இறந்தகால வினையெச்சம்; நெற்று - பகுதி: பின்னது - பெயர்ச்சொல். மருண்டு கண்டாள் - கண்டு மருண்டாள் என்று விகுதிபிரித்துக் கூட்டலுமாம். மருண்டு கண்டதற்குக்காரணம் மேலே விளங்கும். ஓடை - நீரோடுவதெனக் காரணக்குறி. (285) |